Skip to main content

இரண்டு சிப்பாய்கள்

ஜெய விஜயீபவ!!..என்ற கோஷங்கள், சுற்றும் முற்றும் ஒலித்தது.. ரோஜா பூக்கள் பாதைகள் எங்கும் தூவி விடப் பட்டன..... எல்லா காலங்களிலும், பயந்தான்கொளிகள், கொடுத்த வேலையை செய்யப் பிடிக்காதவர்கள், எப்பொழுதும் குற்றம் கூறுபவர்கள், நக்கல் அடிப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள், அவர்களை ஏனோ இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், ஒளவையார்,கண்டறிந்து, கூற மறந்தார்களோ தெரியவில்லை. நான் இன்று எடுத்திக்கொண்டது அம் மாதரியான ஆட்களைத்தான்...

:அடி ஏய், வெளியே வந்து எனக்கு வீரத் திலகம், இடப் போகிறாயா இல்லையா?
உள்ளே இருந்து, ஒரு பெண்மணி வாயை அரைத்துக்கொண்டே வெளியே வந்தால்
:உமக்கு எதுக்கு வீரத் திலகம், வெட்டியாக கூட்டத்தோடு கூட்டம்மாக போகிறவன் தானே நீ.
:ஏன் கூற மாட்டாய், உன் அப்பனிடம் என் வீரத்தை பற்றி கேளும், சும்மா ஒன்றும் இல்லை, இரண்டு மாட்டை அடக்கி தான் உன்னை திருமணம் செய்தேன்.
:ரொம்ப ஒன்றும் கர்ஜிக்க வேண்டாம், நீங்கள் வருவீர்கள் என்று தெரிந்து நான் அந்த மாட்டிருக்கு இரண்டு நாள் உணவு வைக்கவில்லை.
:ஏன் செல்லமே, என் மீது காதலா?
:காதல் ஒன்றும் இல்லை தலைவனே, வீணாக என் வீட்டு காளைக்கு இறையாக வேண்டாம் என்று தான் விட்டு வைத்தேன், ஆனால் அதை பிடிக்க கூட நீர் புரண்டு விழுந்ததாகவும், உமது கோவணத்தை தவற விட்டதாகவும் கூறினார்கள்..
:உன்னை அடக்கி இத்தனை நாள் வீட்டில் வைத்தது, பத்து காளை மாட்டை அடைக்கியதுக்கு சமம்.
:சரி, சரி ஒன்றும் பொலம்ப வேண்டாம், நமது படை தோற்பது போல் தெரிந்தால் பாதியில் வந்து விடுங்கள், வீர வசனம் பேசி, உயிர் உள்ள வரை போராடுவேன் என்று வெட்டியாக அங்கே நின்று கத்த வேண்டாம், இங்கே மாட்டுக்கு தண்ணி காட்ட ஆள் இல்லை.
:மாட்டுக்கு இந்த சிங்கம் தண்ணி காட்டுவதா, சரி சரி, முகத்தை சுளிக்க வேண்டாம் போய் வருகிறேன்.
:தயவு செய்து உங்கள் நண்பன் பூபதியுடன் மட்டும் செல்லாதீர்கள், யாராவுது கயவர்கள் தாக்கினால், உங்களை காப்பாற்ற வக்கில்லாதவன்.
சரி சரி என்றவாரே, மெதுவாக சென்றான் நமது திருச்சிற்றன்,இரண்டு மூன்று தெருக்களை கடந்து சென்றான், அவனது நண்பன் பூபதி இருக்கும் இல்லம் வந்தது, சரி அவனுடுனே போவோம், போகும் நாம் உயிரோடு திரும்புவோமா இல்லையோ நண்பன் ஒருவன் அருகினில் இருந்தால் சற்று ஆருதலவாவுது இருக்கும், நண்பன் வீட்டுக்கு வந்தடைந்தான்.
:அடேய்! பூபதி நேரம் ஆகி விட்டது, இன்னும் நீ தயாராக இல்லையா!.
:ஆமாம், என்னமோ நாம் போய் தான்... , சும்மா இரும் ஐயா, அட நான் போவோமா வேண்டாமா என்றே யோசிச்சு கொண்டிருக்கிறேன், இதில் நீர் வேற..?

: என்ன பூபதி, இப்படி கூறி விட்டாய், இதை நீ முன்னம்மே கூறியிருந்தால், நான் அவசரப்பட்டு, இதற்காக புத்தாடை எல்லாம் தைத்து, புதிதான வாளிற்கு கூர் பார்த்திருக்க மாட்டேன்.
:இதற்காக ஏன் நீ அவசரப்பட்டு புத்தாடை எடுத்தாய், எப்படியும் போரில் சேதம் ஆகப்போகிறது, சரி விடு, இதற்காவாவுது நீ இம்முறை போய்யே ஆக வேண்டும், நான் பரங்கி மலையில் ஒளிந்து கொள்ளப் போகிறேன்.
:டேய் !, பூபதி அப்படியெல்லாம் சொல்லாதே, நீ வருவாய் என்று நினைத்து வந்துவிட்டேன், அம்பு, வாள் எதுவும் நம்மை தாக்காத வாரு, நாம் இரண்டு பேரும் கூட்டத்தின் ஒரு மூலையில் நின்று கொள்வோம்.

:அதுவும் சரி தான் இங்கே எவனாவுது ஒற்றனிடம் மாட்டிக்கொண்டால், நம்மை ஒரு வழி செய்திடுவாரகள், சற்றிரு, நானும் வந்து விடுகிறேன்.

ஒரு வழியாக, நமது நண்பர்கள் போர்க்களம் வந்து சேர்ந்தார்கள்..

:இதென்ன பூபதி கூத்து, சிப்பாய் நம்மை எல்லாம் முன்னே விட்டுவிட்டார்கள்.
:கூத்தை பார்த்து ரசிப்பதுர்க்கு, தான் இப்படி செய்க்கிறார்கள், நாம் புழுதியில் அடி வாங்க வேண்டும், அவர்கள் நோகாமல் இருப்பார்கள், சற்று யோசிச்சிப் பாரு சதுரங்க ஆட்டத்திலும், உண்மையான போரிலும், ராஜா, மந்திரிகள் இவர்களை முன்ன விட்டு நாம் பின் தங்கி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
:மிகவும் கேவலம்மா இருக்கும், ஆட்டம் இரண்டு இடத்திலும் சீக்கரம் முடிந்து விடும், சிப்பாய்கள் இருக்கும் போதே ராஜா மரணம் அடைந்து விடுவார்.

:என்னக் கொடுமை, ராஜாவுக்கும் ஒரு அடி தான், நமக்கும் ஒரு அடி தான் சதுரங்கத்தில், பிறகு அவர் பின்னால் வரிசையில் இருந்து என்னப் பயன். உயரம்மாக இருக்கிறார், வெட்டியாக இருக்கிறார்.
:அவர் மாண்டால், ஆட்டம் தோற்றதாக அர்த்தம், நாம் மடிந்தால் ஆட்டம் இப்பொழுது தான் சூடு பிடிப்பதாக அர்த்தம்.

:சரி குதிரைப் படை, அல்லது யானைப் படையாவுது முன்னாலே துணைக்கு அனுப்பலாம்மே ?.
:சிப்பாய்யாலே முடியும் என்றால் எதற்கு, குதிரையும் யானையும் வீண்ணடிக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள்.
:இதெல்லாம் ரொம்பக் கொடுமை, குதிரையும், யானையும் விட நாம் கேவலமாகிவிட்டோமா! , எல்லாம் விதி, சின்ன வயசுலையே குதிரை செலுத்த பயின்றிக்க வேண்டும், தவறியது இப்படி ஆகி விட்டதே, சரி இப்பொழுதாவுது பழகலாம் என்று பார்த்தால், கழுதை வயதாகியும், இன்னும் குதிரை செலுத்த கற்றுக்கொல்லாமலா இருந்தாய் என்று ஏசுவார்களே என்று பயம்.

:அதெல்லாம் சரி யார் ஐயா, அவன், யானை மீது கையில் வாழும் இல்லை, வேலும் இல்லை
:அடேய்! அவன் தான் ஜெயம்கொண்டான், இங்கே நடக்கப்போகும் போரை பற்றி எழுத வந்துள்ளான்.
:இவர்களை எல்லாம் முதலில், கழுகிடவேண்டும், கடல் போல் படையினர் பொங்கி எழுந்தினர் என்று முதல் வரியில் எழுதுவார்கள், பிறகு அரசனிடம் தங்க முட்டை பெறுவதற்காக, அரசன் அதனிடையில் வேங்கை போல நடந்து வந்தான் என்று எழுதுவார்கள், கடலின் நடுவில் வேங்கை எப்படி ஐயா வரும்..

:இவன் அவர்களை போல் இல்லை, நன்றாகவே எழுதுகின்றான், அவனுடைய ஓலைகளை வாங்கி படித்தேன், ஒரு இடத்தில் நமது நாட்டின் மங்கைகளை பற்றி எழுதி இருக்கிறான், காதலனை கண்ட உடன் மங்கை என்ன ஆகிறாள் என்பதை இவ்வாறு இரண்டு அடியினில் கூறியிருக்கிறான்,
"வாயிர் சிவப்பை விழி வாங்க,
மலர் கண் வெளுப்பை வாய் வாங்க"
:இன்னும் சற்று நேரத்தில் அந்த சிவப்பை நமது முதுகு வாங்கப்போகிருது.
:முகம் ஏற்கனவே வெளுப்பை வாங்கி விட்டது போல?!.
:ஆமாம், அங்கே மற்றும் கோவத்தில் கண்கள் சிவப்பை வாங்கி விட்டதை போல் பேசுகிறீர்கள், உமக்கும் முகம் வெளுப்பாகி விட்டதையா.
சங்கு முழங்கப்பட்டது, போர் வீரர்கள் கரகோஷம் எழுப்பினர், மன்னர் அணைத்து வீரர்களின் முன்னம் வந்தார்
"வீரர்களே!, எமது உடன் பிறவா சகோதரர்களே!, நமது வால்கள் பல நாள் உறையினில், இரை இன்றி இருந்தது போதும், சோழ மண்ணின் மைந்தர்களே இன்று கற்பிப்போம், நமது...
:அடேய்!, திருச்சிற்றா என்ன டா சோம்பல் முறிக்கிறாய், அங்கே அரசன் குருதி போங்க பேசிக்கொண்டிருக்கிறார்
:அடேய்!, பூபதி நான் இதனை பல முறை கேட்டு விட்டேன்.

:என்னது பல முறை கேட்டு விட்டாயா?, என்ன பிதற்றுகிறாய்.
:அட ஆம் ஐயா, இதை தான் இவன் பாட்டனின் முப்பாட்டன் ராஜா ராஜன் இலங்கை போரின் போது கூறினார், அப்பொழுது என் பாட்டனின் முப்பாட்டன் அங்கே இருந்தார், இதனை வாழை வழி வாழையாக எங்கள் குடும்பத்தில் கூறப்பட்டது. எப்பொழுதெல்லாம் எனக்கு பயம் எழுகிறதோ, அப்பொழுதெல்லாம் என் தந்தை எனக்கு இதனை கூறுவார், இப்பொழுதான் தெரிகிறது இதனை சோழ பரம்பரையிலும் கூறியிருக்கிறார்கள் என்று.
:ஐந்து தலைமுறை தாண்டினால் மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைத்தார்களோ என்னம்மோ!
:அந்த எண்ணத்தை கூட மன்னித்து விடலாம், ஆனால், தான் சொந்தம்மாக கூறுவது போல் மார்பு தட்டி உரைப்பதை தான் என்னால் மன்னிக்க முடியவில்லை. எரிவோம் அம்பை என்று கூறி அவர் பின் செல்லுகின்றார்.
:அதாவுது நாமும் பின் செல்ல வேண்டும் என்று பொருள், வா செல்வோம்.
இரண்டு பேரும் பின்னோக்கி ஓடுவதை தடுத்தார் தளபதி
தளபதி: ஏன் இருவரும் பின்னோக்கி ஓடுகிறீர்கள், சோழ வீரர்களின் மறபு முதுகினில் புண் வாங்குவது அல்ல.
பூபதி: அதுவும் சரி தான், பின்னோக்கி ஓடினால் அம்பு நம்மை தாக்க வருகின்றதா என்று தெரியாது, ஆதலால் முன் பார்த்து , பின் ஓடுவோம்.
தளபதி: என்னங்கடா!, கேலியும் கூத்தும் இங்கே.
பூபதி: பின்னாடி எங்களை அழைத்தார்கள் ஐயா, போதும்மா?.
தளபதி: யார் அழைத்தார்கள்?
திருச்சிற்றன்: அதை பின்னாடி வாருங்கள், கூறுகிறோம்.

போரில் சோழர்கள் வென்றனர்..
:அடேய் திருச்சிற்றா!, ஒரு அம்பு என்னை நோக்கி மிக வேகத்துடன் வந்தது, நல்ல வேலை ஆகா அது என்னை தாக்கவில்லை.
:சரி போர் முடிந்தது, நாமும் வீரர்கள் என்று போற்றப்பெருவோம்.
:ஒன்றும் பெற மாட்டோம், திருசிற்றனை பற்றி ஒரு வார்த்தையும் ஜெயம்கொண்டான் எழுத மாட்டார்.
:நம்மை பற்றி ஒருவன் கூடவா எழுத மாட்டான்?!!!

ஏன், நான் இல்லை!,.. தொடர்ந்து எழுதுவேன்!!
வாழ்க தமிழ்!!

Comments

  1. ha ha ha Raghul pinniteenga... :D ROFL... Indha madri oru sindhanai yaarukkum vandhurukkaadhu... Nice blend of comedy into the sanga thamizh script.. Enjoyed a lot. Gonna send it to my dad with ur perission...

    "கடலின் நடுவில் வேங்கை எப்படி ஐயா வரும்."
    ROFLMAO... :D :D

    ReplyDelete
  2. THIS IS UR BEST TILL DATE...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கொடுமை!

"உங்க ஊரு சாப்புடுல மட்டும் அப்படி என்ன ராகுல் இருக்கு , எல்லாத்திலையும் அரிசிய போடறீங்க, காலையில இட்லி சாம்பார், மதியம் சோறும் சாம்பார், திருப்பி சோறும் ரசம், திருப்பி சோறும் தயிரும், உங்களுது என்னமோ ரொம்ப நல்லா இருக்கிற மாதிரி, அதுக்கு ரொட்டி எவ்வளவோ தேவலாம்.." (மனசில் ஒரு குரல்) ராகுல்! பொறுத்தது போதும் பொங்கி ஏழு! டேய் ! நாதாரிகளா நானும் ஏதோ corporate உலகம் எதுக்கு சண்ட போடணும் சிரிச்சி!, சிரிச்சி!, சமாளிக்கலாம் அப்படின்னு பார்த்தா கடைசியில எங்க சாப்பாட்ட பத்தி கேவலமா பேசி எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிடீங்க. "என்னது எங்க சாப்பாடு கேவலம்மா இருக்கா! அடப் பாவிகளா! டேய் உங்க சாப்பாடு நல்லா இருக்குனு சொல்லி இருந்தா போனா போகுதுன்னு விட்ருப்பேன், எங்க சாபாடைய்யா குறை சொல்லுற, நீங்க வக்கிர இந்த ரொட்டி, பருப்பு, பச்ச அரிசி இத விட, டேய் நல்லா கேட்டுக்கோ இத விட எங்க வாழை இலையில அவியல், பொரியல், வறுவல், ஊருக்காய், சாப்பாடு, சாம்பார், ரசம், தயிர், பாயாசம், இதெல்லாம் எவ்வளோ மேல் டா!, எங்க சாப்பாடு கேவலம்மா இருக்கா, மனசாட்சின்னு ஒண்ணு உங்களுக்கு இருக்கா, மத...

என்னைத்தாவுது போட்டு ஆட்டுங்க !!

எங்க கல்லூரியில ஒரு விழா, அதுல நாடகம், நடனம் கம்மியாவும் மொக்க ஜாஸ்தியாவும் எப்போவும்மே இருக்கும். நாடகத்துக்கு இடையில மேடையில வந்து சில பேறு குரல் மாத்தி பேசுறதும், சில பல ஒலியுடன் கூடிய ஒளிக் காட்சிகளையும் காட்டுறது வழக்கம். நானும் என் நண்பன் நிகமாந்துக்கும் எப்பொழுதும் இதான் வேலை, நாங்க சொல்லுறத கண்டிப்பா சேத்துக்க மாட்டானுங்கனு தெள்ளத் தெளிவா தெரிஞ்சிருந்தும், சும்மா எங்களுக்குள்ளையே பேசிப்போம் இப்படி இருந்தா எப்படி இருக்கும்னு. அந்த வகையா வந்த சில பல கற்பனைகளை, இங்க தூவி விட்டிருக்கேன். : ஏன் நிகமாந்த அந்த பெயர்க் காட்சிய இப்படி பண்ண என்ன? : எப்படி? : சொல்லுறேன் கேளுங்க, மேகதுக்குள்ள ஆண் கடவுள்ளும் பெண் கடவுள்ளும் பேசிக்கிறாங்க. : யோவ்! பெண் கடவுள் குரலுக்கு எங்க போவீங்க. : நிகமாந்த இதலாம் ஒரு பிரச்சனையா, ஏதாவுது EEE, Prod'ல இருந்து பிடிச்சிக்கிடலாம். : சரி, மேகத்தையும், கடவுளையும் எப்படி காட்டுவீங்க? : நிகமாந்த், கிராபிக்ஸ்’ல காட்றோம். : ராகுல்!, நாம போடப் போறது கே.ஸ்.ரவிக்குமார் படம் மாதிரி ஒரு மசாலா, நீங்க ஷங்கர் மாதிரி யோசிக்கிறீங்க, காசு இல்ல பாஸ். :இதான்யா,...