Skip to main content

Posts

Showing posts from 2011

குதிக்குது குதிக்குது குதிரைக்குட்டி !!

காலங்காத்தால, வந்து இந்த 'போஹவ' சாபிடானும்மா அப்படின்னு நொந்து போயி, தட்டுல கரண்டிய ஓங்கி அடிச்சாபுல வச்சேன். திரும்பி, மக்கள் இருக்கிற இடம் பார்த்தேன், ஒரே ஒரு மொக்க போடுற நாயி தான் உட்கார்ந்திருந்தான், இந்த அலுவலகத்துல ஒரு கெட்டப் பழக்கம்,ஒரு ஆள பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ, பக்கத்துல அந்த சனியன் பக்கத்துல உட்கார்ந்தா ஆகணும், அவன் சொல்லுற மொக்கையே சிரிச்சிக்கிட்டே கேட்கணும் , அதுவும் இப்போ உட்கார்ந்திருக்கிறவன் ரொம்ப மோசம், அவன்கிட்ட உட்கார்ந்தோம் ஒசிளையே நம்மளபாராளுமன்றத்துல ஆரம்பிச்சு, அப்படியே ஜெர்மனிக்கு போயிட்டு, அமெரிக்காவுல விமானத்த வளைச்சு, திருப்பி நம்ம அலுவகத்துக்கு முன்னால இறக்கிருவான்.. ஆனா ஊனா 'see in US, there is a thing called...,' இவ்வளோ மொக்கைக்கும் கண்ணா நல்லா விழுச்சி, புருவத்த நல்லா தூக்கி, அப்-அப்போ ஆசிரியம்மா உச்சு கொட்டிடோம், கிளிஞ்சது...! அவன் ஒவ்வொரு பருக்கையா சாபிடுற ஆளு, காலையில சாப்பிட உட்கார்ந்தா மதிய பந்திக்கும் நேரம் வந்திரும். எனக்கு சில நேரம் சந்தேகம்மே வரும் நாம ஏதாவுது பைத்தியக்கார ஆஸ்பத்ரிக்கு வந்திடோம்மானு, ரெண்டு வருஷம்மா ஒருத்தன் ஒ...

பேருந்துப் பயணம்

சின்ன வயசுல இருந்தே, எனக்கு பேருந்துல பிரயாணம் பண்ண ரொம்ப பிடிக்கும், நெரிச்சல் இருந்தாலும், அடுத்தவன் என்ன பண்ணுறான், என்னென்ன பேசுறானுங்க, எந்தெந்த தோரணையில பேசுறானுங்க, எத்தனை விதம்மான மக்கள்கள், இவுங்கள எல்லாம், அவுங்களுக்கு தெரியாம ரசிக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப நெடுந்தூரம் பிரயாணம் அப்படின்னா இடையில வண்டி நிக்கிறதுண்டு. எல்லாம் முடிஞ்சு, வண்டி எடுக்கிற நேரத்துல வேகம்மா ஓடி வந்து ஏறுற ஆளுங்க ஒரு ரகம், வேற எதாவுது வண்டியோட ஹாரன் சத்தத்த கேட்டு, நம்ம வண்டியா இருக்குமோனு வந்து பார்த்து ஏமாந்து போயி, எதுக்குடா வம்பு'னு சீக்கரம்மே வந்து உட்காருர ராகம் ஒண்ணு, இடத்துக்காக துண்டு போட்ட இடத்துல, வேற ஒரு ஆள் உட்கார, கீழ தூக்கிப்போட்ட துண்டு எடுத்திக்கிட்டு அமைதியா இருக்கிற ரகம் ஒண்ணு, எடுத்த துண்ட கடுப்பா உதறிட்டு வண்டி கிளம்பின 20 நிமிஷத்துக்கு பிற்பாடு கொஞ்ச கொஞ்சாம முணுமுணுத்த வாய் சத்தம்மா சண்ட போட ஆரம்பிக்கிறது ஒரு ரகம். பொம்பளைங்க கிட்ட சிலிமிஷம் பண்ண உடனே பொங்கி எழுற கூட்டம் ஒரு ரகம், ஐயோ ! ஐயோ ! இப்படி பண்ணுறானே என்ன பண்ணுறது'னு தெரியாம முழிக்கிற சில பேர் ஒரு ரகம்...

என்னைத்தாவுது போட்டு ஆட்டுங்க !!

எங்க கல்லூரியில ஒரு விழா, அதுல நாடகம், நடனம் கம்மியாவும் மொக்க ஜாஸ்தியாவும் எப்போவும்மே இருக்கும். நாடகத்துக்கு இடையில மேடையில வந்து சில பேறு குரல் மாத்தி பேசுறதும், சில பல ஒலியுடன் கூடிய ஒளிக் காட்சிகளையும் காட்டுறது வழக்கம். நானும் என் நண்பன் நிகமாந்துக்கும் எப்பொழுதும் இதான் வேலை, நாங்க சொல்லுறத கண்டிப்பா சேத்துக்க மாட்டானுங்கனு தெள்ளத் தெளிவா தெரிஞ்சிருந்தும், சும்மா எங்களுக்குள்ளையே பேசிப்போம் இப்படி இருந்தா எப்படி இருக்கும்னு. அந்த வகையா வந்த சில பல கற்பனைகளை, இங்க தூவி விட்டிருக்கேன். : ஏன் நிகமாந்த அந்த பெயர்க் காட்சிய இப்படி பண்ண என்ன? : எப்படி? : சொல்லுறேன் கேளுங்க, மேகதுக்குள்ள ஆண் கடவுள்ளும் பெண் கடவுள்ளும் பேசிக்கிறாங்க. : யோவ்! பெண் கடவுள் குரலுக்கு எங்க போவீங்க. : நிகமாந்த இதலாம் ஒரு பிரச்சனையா, ஏதாவுது EEE, Prod'ல இருந்து பிடிச்சிக்கிடலாம். : சரி, மேகத்தையும், கடவுளையும் எப்படி காட்டுவீங்க? : நிகமாந்த், கிராபிக்ஸ்’ல காட்றோம். : ராகுல்!, நாம போடப் போறது கே.ஸ்.ரவிக்குமார் படம் மாதிரி ஒரு மசாலா, நீங்க ஷங்கர் மாதிரி யோசிக்கிறீங்க, காசு இல்ல பாஸ். :இதான்யா,...