இதை என் diary'la எழுதெலாம்னு நினைச்சேன், சரி எல்லாத்துக்கும் பொருந்தும் நினைச்சு இங்க போட்டிருக்கேன். ஆண்டவன் , என்னை நினைச்சு நம்மள படச்சான்னு தெரியல , ஆனா நாம ஒவ்வொரு காரியம் பண்ணும் போதும் மனசுல கண்டிப்பா நினைப்பு ஓடும் , அந்த நினைப்பு சில நேரத்துல தான் ஒரு முகப் பட்டிரிருக்கும் , பல நேரம் இரண்டு விதம்மா சிதறி கிடக்கும் , இப்போ உதாரணத்துக்கு , கல்லூரியில படிக்கும் போது நடந்தத சொல்லுறேன் , ராத்திரி சாபிடுற நேரம் , சனிக்கிழமை , உள்ள நல்லா இருக்காது , வெளிய போகணும்னு தோணும் , ஆனா தனியா போகப் பிடிக்காது , நண்பன ஒருத்தன் வருவான் : ராகுல் , வா டா வெளிய போவோம் ? இந்த கேள்விய கேட்ட உடனே நம்ம மனசு ரெண்டா பிரிஞ்சி வேலை செய்ய ஆராம்பிச்சிரும் : இவன் கூட போலாம் , ஆனா இவன் கூட இன்னொருத்தன் கண்டிப்பா வருவான் , அவனுக்கும் நமக்கும் ஆகாது . : டேய் ! , அவன் வந்திட்டு போறான் , நீ இவன் கிட்ட உட்காரு , உள்ள நல்லா இல்ல , அப்புறம் ஏன் போலன்னு வருத்தப் பட போற . : என்னத்த , இவீங்க குள்ளையே பேசிக்கிட்டு இருப்பானுங்க , நா...