Skip to main content

Posts

Showing posts from November, 2010

இரண்டு சிப்பாய்கள்

ஜெய விஜயீபவ!!..என்ற கோஷங்கள், சுற்றும் முற்றும் ஒலித்தது.. ரோஜா பூக்கள் பாதைகள் எங்கும் தூவி விடப் பட்டன..... எல்லா காலங்களிலும், பயந்தான்கொளிகள், கொடுத்த வேலையை செய்யப் பிடிக்காதவர்கள், எப்பொழுதும் குற்றம் கூறுபவர்கள், நக்கல் அடிப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள், அவர்களை ஏனோ இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், ஒளவையார்,கண்டறிந்து, கூற மறந்தார்களோ தெரியவில்லை. நான் இன்று எடுத்திக்கொண்டது அம் மாதரியான ஆட்களைத்தான்... :அடி ஏய், வெளியே வந்து எனக்கு வீரத் திலகம், இடப் போகிறாயா இல்லையா? உள்ளே இருந்து, ஒரு பெண்மணி வாயை அரைத்துக்கொண்டே வெளியே வந்தால் :உமக்கு எதுக்கு வீரத் திலகம், வெட்டியாக கூட்டத்தோடு கூட்டம்மாக போகிறவன் தானே நீ. :ஏன் கூற மாட்டாய், உன் அப்பனிடம் என் வீரத்தை பற்றி கேளும், சும்மா ஒன்றும் இல்லை, இரண்டு மாட்டை அடக்கி தான் உன்னை திருமணம் செய்தேன். :ரொம்ப ஒன்றும் கர்ஜிக்க வேண்டாம், நீங்கள் வருவீர்கள் என்று தெரிந்து நான் அந்த மாட்டிருக்கு இரண்டு நாள் உணவு வைக்கவில்லை. :ஏன் செல்லமே, என் மீது காதலா? :காதல் ஒன்றும் இல்லை தலைவனே, வீணாக என் வீட்டு காளைக்கு இறையாக வேண்டாம் என்று தான் விட்...

HAPPY DIWALI FOLKS !!!!!!

: டா ட் டா !!! : ராகுல் , HAPPY DIWALI , ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் !!!!! : டேய் ! , ராகுல் உனக்கு இத்தனை பொம்பள பிள்ளைங்க , friends'aadaa !!! மறு நாள் தீபாவளி , மழை சாயங்காலம் நல்லா பெஞ்சுக்கிட்டு இருந்தது , நான் பள்ளி முடிஞ்சு வீட்டுக்கு van'la வந்திக்கிட்டு இருந்தேன் , பையன் மழையில நனைஞ்சா கரைஞ்சு போயிருவாண்டு , அப்பா குடை எடுத்து வந்திருந்தாரு . எந்த நாளுமே பேசாத பொண்ணுங்க , இந்த மாதிரி தீபாவளி இல்லாட்டி பொங்கல் இந்த மாதிரி பண்ணிடிகை நாளைக்கு மட்டும் வாழ்த்து சத்தம் போட்டு சொல்லுவாளுக , மித்த நாள்ளேலாம் , அவளுக நல்லா சொகுசா சீட்டுல உட்கார்ந்து வருவாளுக நாங்க வண்டியோட radiator மேல உட்கார்ந்து வருவோம் .. உட்காரும் போது சாதா பன்னா இருக்கும் இறங்கும் போது , ரெண்டும் நல்லா தீஞ்சு போயிரும் ... இந்த பொண்ணுங்க இப்படி பொதுப்படியா கத்துனத அப்பா தப்ப எடுத்து ஏதோ எனக்கும் அவளுகளுக்கும் நல்லா பழக்கம்னு தப்பா நினனச்சிட்டாரு ... வீட்டுக்கு வந்த உடனே , பை ’ ய கழட்டி வச்சு , தலைய துவட்டன படியே பூஜா அறைக்குள்ள போன்னேன்...