Skip to main content

HAPPY DIWALI FOLKS !!!!!!

: டா ட் டா !!!

: ராகுல், HAPPY DIWALI , ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் !!!!!

: டேய்! , ராகுல் உனக்கு இத்தனை பொம்பள பிள்ளைங்க, friends'aadaa !!!

மறு நாள் தீபாவளி, மழை சாயங்காலம் நல்லா பெஞ்சுக்கிட்டு இருந்தது, நான் பள்ளி முடிஞ்சு வீட்டுக்கு van'la வந்திக்கிட்டு இருந்தேன், பையன் மழையில நனைஞ்சா கரைஞ்சு போயிருவாண்டு, அப்பா குடை எடுத்து வந்திருந்தாரு. எந்த நாளுமே பேசாத பொண்ணுங்க, இந்த மாதிரி தீபாவளி இல்லாட்டி பொங்கல் இந்த மாதிரி பண்ணிடிகை நாளைக்கு மட்டும் வாழ்த்து சத்தம் போட்டு சொல்லுவாளுக, மித்த நாள்ளேலாம், அவளுக நல்லா சொகுசா சீட்டுல உட்கார்ந்து வருவாளுக நாங்க வண்டியோட radiator மேல உட்கார்ந்து வருவோம்.. உட்காரும் போது சாதா பன்னா இருக்கும் இறங்கும் போது, ரெண்டும் நல்லா தீஞ்சு போயிரும் ... இந்த பொண்ணுங்க இப்படி பொதுப்படியா கத்துனத அப்பா தப்ப எடுத்து ஏதோ எனக்கும் அவளுகளுக்கும் நல்லா பழக்கம்னு தப்பா நினனச்சிட்டாரு...

வீட்டுக்கு வந்த உடனே, பை கழட்டி வச்சு, தலைய துவட்டன படியே பூஜா அறைக்குள்ள போன்னேன், புதுசா வெடி parcel வந்திருந்தது, மெதுவா அந்த brown paper'ah தூக்கி பார்த்தேன், ரெண்டு நூறு சர வெடி, double shot , bijili, bullet, நிறைய லட்சுமி வெடி, கம்பி மத்தாப்பு .

: டேய் ! ராகுல் சீக்கரம் ஆடைய மாட்டிட்டு வா டா, அடுத்த வாரம் அர பரீட்சை வருதுல, இன்னைக்கு படிச்சா தான் உண்டு , நாளைக்கு ஒண்ணும் படிக்க முடியாது... இன்னைக்கு ராத்திரி உனக்கு கணிதத்துளையும், அறிவியலையும் பரீட்சை வைப்பேன், ஒழுங்கா படிக்கணும் , புரிஞ்சதா? !!!

எனக்கு மனசுக்குல எல்லா பட்டாசும் வெடிச்சது, அவ்வளோ கோவம் இந்த பால போன பரீட்சை எந்த நாயி கண்டி புடிச்சானோ.. சட்டைய மாத்திட்டு தலைய குனிஞ்ஜாப்புல வெளிய வந்தேன், ரொம்ப நல்லா பையன் மாதிரி புத்தகத்த எடுத்து உட்கார்ந்தேன்.. கண்ணு எழுத்த பார்த்தது, மனசுல அந்த வெடிய நம்ம வெயில காய வைக்கலையே ஒழுங்கா வெடிக்குமா, ஐய்யயோ எல்லாம் புஸ்ஸ்னு போச்சுனா, மழை வேற பெனசிருக்கு ஒழுங்கா வெடிக்கும்மானு கவலை..

: டேய்! படிக்கிறீயா இல்ல என்ன பண்ணுற?

: படிச்சிக்கிட்டு தான் பா இருக்கேன்

: அர மணி நேரம்மா ஒரே பக்கத்துல உட்கார்ந்திருக்க, இந்த வாட்டி மட்டும் மதிப்பேன் எடுக்கல, துளைச்சு புடுவேன், துளைச்சு!!

இப்படி அப்பா திட்டுன உடனே ஒரு பதினஞ்சு நிமுஷம் படிச்சிக்கிட்டு இருந்தேன்.. பக்கத்துக்கு வீட்டுல புஸ்வானம் வச்சிக்கிட்டு இருந்தாங்க அந்த வாசம் ஜன்னல் வழியா வந்து என் மூக்கு வழியா போய், நுரையீரலுக்கு போகாம, மனசுக்கு போயி, ஐய்யயோ புஸ்வானம் இருக்கு ஆனா அதை பத்தவக்கிரதுக்கு கம்பி மத்தாப்பு இல்லையேன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன்..

ஒரு வழியா சாப்பிட்டு, தூங்கிறதுக்கு படுத்தாச்சு, எனக்கும் தூக்கம் வரல, அண்ணனுக்கும் தூக்கம் வரல.. எப்பவும்மே இந்தியா - பாக்கிஸ்தான் எல்லை பிரச்சனை மாதிரி தள்ளியே படுக்கிற நானும் அண்ணனும் சேர்ந்து தூங்கிரதுனா அது தீபாவளி ராத்திரி தான்.. ரெண்டு பேரும் ஒரே போர்வைக்கடியில படுத்து நாளைக்கு என்ன வெடி எப்ப வெடிக்கனும்னு பேசிக்கிட்டு இருப்போம்... வானத்துல வெடியில இருந்து வர வெளிச்சத்துல , அண்ணா எவ்வளோ ஆர்வம்ம வெடி வெடிக்கிறத பத்தி பேசுரான்கிறது தெரியும், மனசு லேசா பயம் ஆயிரம் ஒரு வேலை இவன் எனக்கு முனால எழுந்து வெடி வெடிக்க ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சிருவான், நாம முதல எழுந்திரிக்கனும்.. மெதுவா கண்ணா மூடுவேன், அண்ணா தட்டி எழுப்பி சொல்லிக்கிட்டே இருப்பான்.

: கேட்கிறீயா இல்லையா டா? !!

: கேட்கிட்டு தான் இருக்கேன் சொல்லு டா.

: டேய் முதல பிஜிலி வெடி தான் டா வெடிக்கனும்...

: ம்ம்....

அப்பா நாங்க பேசுறத கேட்டு எழுந்திருச்சு.

: "டேய் தூங்குங்டா !! " அப்படின்னு ஒரு சத்தம் போடுவாரு.

ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் அமைதியா இருப்போம், மெத்தைக்கு மேல இருக்கிற torch எடுத்து மணிய பார்பான் அண்ணன்.

: "டேய் ராஜீவ், நீ இன்னும் தூங்கலையா" அப்படின்னு சிரிப்ப அடக்க முடியாம கேட்பேன்.

: டேய் ! நீயும் இன்னும் முழிச்சிக்கிட்டு தான் இருக்கியா, எனக்கு தூக்கம்மே வர மாட்டீங்கது.

: எனக்கும் தான், இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு?.

: “மணி 11:30 ஆயிருச்சு இன்னும் அரை மணிநேரம் தான் இருக்கு”.

இன்னைக்கு மட்டும் ஏன்டா நேரம் நம்ம பள்ளி வண்டி டொரிக்கி டொரிக்கி மாதிரி மெதுவா போகுதுன்னு நோந்துக்குவோம்.இன்னும் கொஞ்ச நேரம் கண்ணா மூடுவோம், தூக்கம் அப்பொழுதும் வராது.. பனிரெண்டு மணி பக்கத்துக்கு வீட்டு மதன் அண்ணா விசில் வெடி வச்ச சத்தத கேட்டு திருப்பி torch எடுத்து மணிய பார்ப்போம்.

: டேய் ராகுல் மணி பனிரெண்டு ஆயிருச்சு, HAPPY DIWALI !!!

: HAPPY DIWALI !! அப்படின்னு சொல்லி ரெண்டு பேரும் கை குழுக்கி வாழ்த்து தெரிவிச்சு கண்ண மூடுவோம், அப்போ தான் தூக்கம்மே வரும்.

காலையில நாழு மணிக்கெல்லாம் முழிப்பு வந்திரும், அமைதியா ரெண்டு பேரும் காலைக்கடன் குளிக்கரத தவுர மித்த எல்லாத்தையும் முடிச்சிருவோம். என்னை தேச்சி குளிச்சே ஆகணும் கிற ஒரு கட்டாயத்துல நல்லா குரட்ட விட்டு தூங்கிக்கிட்டு இருக்கிற அப்பா' எழுப்பி விடுவோம்..

: அதான் வெளிச்சம் நல்லா வந்திருச்சுல, சும்மா போ பா..

: இல்லை பா அதெல்லாம் முடிஞ்சிருச்சு, சுடு தண்ணி வைங்க குளிக்கணும்

அப்பா மெல்ல எழுந்து உட்கார்ந்து மணிய பார்ப்பாரு

: டேய் மணி ஐஞ்சு தான் டா போயி தூங்குங்க பா

: அப்பா தூக்கம்மே வரல

: டேய் இந்த குளுருல குளிக்க கூடாது போயி தூங்குங்க ஆறு மணிக்கு குளிக்கெலாம்

வெறுப்போட ரெண்டு பேரும் போயி படுப்போம்..

காலை 9 மணி, ஒரு பாக்கேட் சீனி வெடி போட்டு முடிக்கிரத்துக்குல வீடுக்குள இருந்து கூப்பிட்டாங்க..


: டேய்! வா டா

என்னனு போயி பார்த்தா, எங்களால கடிக்க முடியாத முறுக்கு, கேவலம்மான அதிரசம் பக்கத்துக்கு வீட்டுக்கு போயி கொடுக்கனும்மா, என்ன கொடுமை... தட்டை தூக்கிட்டு பக்கத்துக்கு வீட்டுக்கு போன்னேன், பக்கத்துக்கு வீட்டு நாயிக்கு எப்படியோ தெரிஞ்சு போச்சு உள்ள இருக்கிற சரக்கு நல்ல இருக்காது, எப்படியும் கடைசியில நம்மக்கு தான் போடா போறாங்கனு, அது தட்டை பார்த்த உடனே குரைக்க ஆரம்பிச்சிருச்சு.. உள்ள இருந்து நாயி குரைக்கரத கேட்டு வந்தாங்க


: சும்மா வா பா அது ஒண்ணும் பண்ணாது .

நான் மனசுக்குளையே நினைசிக்கிட்டேன், மித்த நாளு வந்திருந்தா வால் ஆட்டிருக்கும், இன்னைக்கு தட்டோட அதுவும் எங்க வீட்டுல பண்ண திண் பண்களோட வந்திருக்கேன், அது சாவுரலவுக்கு அளவுக்கு அடிச்சா கூட இடத்த விட்டு நவராது.


: இல்லை, Aunty , நான் சீக்கரம் போகணும்
: இப்போ வா பா, நாயா கட்டியாச்சு, பண்டிகை அதுவும்மா வந்திட்டு உடனே போக கூடாது, சும்மா வந்திட்டு போ.
சரின்னு உள்ள போன்னேன், உள்ள போனதும்
: வா பா, ஏய் தம்பி வந்திருக்குல சாப்பிட அந்த இனிப்ப கொண்டு வா
: (நாங்க விவரம் யோவ்), இல்லை uncle! , எனக்கு இனிப்பு சாப்பிட்டா சலி புடுசிக்கும்.
: சரி!, சரி!, அப்புரம்மா தம்பி தீபாவளிக்கு வீட்ல என்னை special உங்க வீட்ல?
: ஒண்ணும் இல்லை uncle, சும்மா எப்பவும் போல தான்...

: சரி, படிப்பெல்லாம் எப்படி போகுது?
: நல்லா தான் uncle போய்க்கிட்டு இருக்கு.
"இந்தா பா" அப்படின்னு சொல்லி என் முன்னால ஒரு பெரிய தாம்பாள தட்டுல தின் பண்டங்கள நீட்டினாங்க,
: அய்யோ! , இவ்வளோ என்னால சாப்பட முடியாது
: வீட்டுக்கு எடுத்திட்டு போ பா
வீட்டுக்கு வந்த உடனே தட்ட வச்சு வெளிய வெடி வெடிக்க ஓடின்னேன், அப்பா கூப்பிட்டு
: ராகுல், என்ன பா சொன்னாங்க?
: ஒண்ணும் சொல்லல பா
: அப்புறம் எப்படி டா இவ்வளோ நேரம் ஆச்சு, என்னை சொன்னாங்க சொல்லு
: சும்மா நல்லா இருக்கீயா, சாப்டியா அப்படின்னு கேட்டாங்க அவ்வளோ தான்
: நீ என்னை சொன்ன ?
: நல்லா இருக்கேன் தான் பா சொன்னேன் !!!!!!!! விடுங்க பா....

இந்த மாதிரி பல விஷயங்கள், ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும், ஒண்ணும் மட்டும் உறுதி மித்த நாள விட, தீபாவளிக்கு வீட்டுக்கு முன்னால போடுற கோலத்துக்கும், வீட்டுல செய்யுற உணவுக்கும், பேசுற பேச்சும், எல்லாதுக்கும்மே ஒரு வித்யாசம் மற்றும் சிறப்பு இருக்கும், இந்த தீபாவளிக்கு அன்னைக்கு எனக்கு தெரிஞ்சு பல பேறு வீட்டுக்கு போகல, வேலை விஷயம்மா, மேல் படிப்பு காரணம்மா, குறைந்த தினங்களே விடுமுறை இது காரணம்மா, பயணச் சீட்டு கிடைக்கலன்னு ஒரு காரணம்மா போகாமல் இனிமேல் இருக்காதீங்க, இன்ப ஒளியாம் தீப திரு நாள் அன்று, ஒழுங்கா scene'a போடாம வீட்டுக்கு போயி சேருமாறு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறன்.

Comments

  1. Some problem with my editor, sorry for the alignment and spelling errors

    ReplyDelete
  2. Miga miga arumai... Romba rasichu padchen...
    Andha naai scene dhaan top class.
    Previous night muzhichttu irukardhu, vedi vedikka schedule podardhu, pakkathu veetukku sweet kudukardhu... Ada ada...
    Also liked "நல்லா இருக்கேன் தான் பா சொன்னேன் !!!!!!!! விடுங்க பா.."

    ReplyDelete
  3. U cud hav added spl TV programs too...

    Btw last para patri... I did realise it

    ReplyDelete
  4. Vaazhapazhathula oosi yethura madhiri 'nachu' nu kadaisila oru matter sonna paathiyaa.. Gethu da..!

    Aama.. Nee deepavali ku ooruku poniyaa?

    ReplyDelete
  5. @ Nigs : Thalaivarae!, ithuvae persusaana maathri oru feel, ithula spl programs ellaam add panni yiruntha romba perusaayirukkum.

    @Keerthi: Naan'laam oru naal munnaadiyae veetla poi aajar aayittaen.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இரண்டு சிப்பாய்கள்

ஜெய விஜயீபவ!!..என்ற கோஷங்கள், சுற்றும் முற்றும் ஒலித்தது.. ரோஜா பூக்கள் பாதைகள் எங்கும் தூவி விடப் பட்டன..... எல்லா காலங்களிலும், பயந்தான்கொளிகள், கொடுத்த வேலையை செய்யப் பிடிக்காதவர்கள், எப்பொழுதும் குற்றம் கூறுபவர்கள், நக்கல் அடிப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள், அவர்களை ஏனோ இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், ஒளவையார்,கண்டறிந்து, கூற மறந்தார்களோ தெரியவில்லை. நான் இன்று எடுத்திக்கொண்டது அம் மாதரியான ஆட்களைத்தான்... :அடி ஏய், வெளியே வந்து எனக்கு வீரத் திலகம், இடப் போகிறாயா இல்லையா? உள்ளே இருந்து, ஒரு பெண்மணி வாயை அரைத்துக்கொண்டே வெளியே வந்தால் :உமக்கு எதுக்கு வீரத் திலகம், வெட்டியாக கூட்டத்தோடு கூட்டம்மாக போகிறவன் தானே நீ. :ஏன் கூற மாட்டாய், உன் அப்பனிடம் என் வீரத்தை பற்றி கேளும், சும்மா ஒன்றும் இல்லை, இரண்டு மாட்டை அடக்கி தான் உன்னை திருமணம் செய்தேன். :ரொம்ப ஒன்றும் கர்ஜிக்க வேண்டாம், நீங்கள் வருவீர்கள் என்று தெரிந்து நான் அந்த மாட்டிருக்கு இரண்டு நாள் உணவு வைக்கவில்லை. :ஏன் செல்லமே, என் மீது காதலா? :காதல் ஒன்றும் இல்லை தலைவனே, வீணாக என் வீட்டு காளைக்கு இறையாக வேண்டாம் என்று தான் விட்...

கொடுமை!

"உங்க ஊரு சாப்புடுல மட்டும் அப்படி என்ன ராகுல் இருக்கு , எல்லாத்திலையும் அரிசிய போடறீங்க, காலையில இட்லி சாம்பார், மதியம் சோறும் சாம்பார், திருப்பி சோறும் ரசம், திருப்பி சோறும் தயிரும், உங்களுது என்னமோ ரொம்ப நல்லா இருக்கிற மாதிரி, அதுக்கு ரொட்டி எவ்வளவோ தேவலாம்.." (மனசில் ஒரு குரல்) ராகுல்! பொறுத்தது போதும் பொங்கி ஏழு! டேய் ! நாதாரிகளா நானும் ஏதோ corporate உலகம் எதுக்கு சண்ட போடணும் சிரிச்சி!, சிரிச்சி!, சமாளிக்கலாம் அப்படின்னு பார்த்தா கடைசியில எங்க சாப்பாட்ட பத்தி கேவலமா பேசி எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிடீங்க. "என்னது எங்க சாப்பாடு கேவலம்மா இருக்கா! அடப் பாவிகளா! டேய் உங்க சாப்பாடு நல்லா இருக்குனு சொல்லி இருந்தா போனா போகுதுன்னு விட்ருப்பேன், எங்க சாபாடைய்யா குறை சொல்லுற, நீங்க வக்கிர இந்த ரொட்டி, பருப்பு, பச்ச அரிசி இத விட, டேய் நல்லா கேட்டுக்கோ இத விட எங்க வாழை இலையில அவியல், பொரியல், வறுவல், ஊருக்காய், சாப்பாடு, சாம்பார், ரசம், தயிர், பாயாசம், இதெல்லாம் எவ்வளோ மேல் டா!, எங்க சாப்பாடு கேவலம்மா இருக்கா, மனசாட்சின்னு ஒண்ணு உங்களுக்கு இருக்கா, மத...

என்னைத்தாவுது போட்டு ஆட்டுங்க !!

எங்க கல்லூரியில ஒரு விழா, அதுல நாடகம், நடனம் கம்மியாவும் மொக்க ஜாஸ்தியாவும் எப்போவும்மே இருக்கும். நாடகத்துக்கு இடையில மேடையில வந்து சில பேறு குரல் மாத்தி பேசுறதும், சில பல ஒலியுடன் கூடிய ஒளிக் காட்சிகளையும் காட்டுறது வழக்கம். நானும் என் நண்பன் நிகமாந்துக்கும் எப்பொழுதும் இதான் வேலை, நாங்க சொல்லுறத கண்டிப்பா சேத்துக்க மாட்டானுங்கனு தெள்ளத் தெளிவா தெரிஞ்சிருந்தும், சும்மா எங்களுக்குள்ளையே பேசிப்போம் இப்படி இருந்தா எப்படி இருக்கும்னு. அந்த வகையா வந்த சில பல கற்பனைகளை, இங்க தூவி விட்டிருக்கேன். : ஏன் நிகமாந்த அந்த பெயர்க் காட்சிய இப்படி பண்ண என்ன? : எப்படி? : சொல்லுறேன் கேளுங்க, மேகதுக்குள்ள ஆண் கடவுள்ளும் பெண் கடவுள்ளும் பேசிக்கிறாங்க. : யோவ்! பெண் கடவுள் குரலுக்கு எங்க போவீங்க. : நிகமாந்த இதலாம் ஒரு பிரச்சனையா, ஏதாவுது EEE, Prod'ல இருந்து பிடிச்சிக்கிடலாம். : சரி, மேகத்தையும், கடவுளையும் எப்படி காட்டுவீங்க? : நிகமாந்த், கிராபிக்ஸ்’ல காட்றோம். : ராகுல்!, நாம போடப் போறது கே.ஸ்.ரவிக்குமார் படம் மாதிரி ஒரு மசாலா, நீங்க ஷங்கர் மாதிரி யோசிக்கிறீங்க, காசு இல்ல பாஸ். :இதான்யா,...