எங்க கல்லூரியில ஒரு விழா, அதுல நாடகம், நடனம் கம்மியாவும் மொக்க ஜாஸ்தியாவும் எப்போவும்மே இருக்கும். நாடகத்துக்கு இடையில மேடையில வந்து சில பேறு குரல் மாத்தி பேசுறதும், சில பல ஒலியுடன் கூடிய ஒளிக் காட்சிகளையும் காட்டுறது வழக்கம். நானும் என் நண்பன் நிகமாந்துக்கும் எப்பொழுதும் இதான் வேலை, நாங்க சொல்லுறத கண்டிப்பா சேத்துக்க மாட்டானுங்கனு தெள்ளத் தெளிவா தெரிஞ்சிருந்தும், சும்மா எங்களுக்குள்ளையே பேசிப்போம் இப்படி இருந்தா எப்படி இருக்கும்னு. அந்த வகையா வந்த சில பல கற்பனைகளை, இங்க தூவி விட்டிருக்கேன்.
: ஏன் நிகமாந்த அந்த பெயர்க் காட்சிய இப்படி பண்ண என்ன?
: எப்படி?
: சொல்லுறேன் கேளுங்க, மேகதுக்குள்ள ஆண் கடவுள்ளும் பெண் கடவுள்ளும் பேசிக்கிறாங்க.
: யோவ்! பெண் கடவுள் குரலுக்கு எங்க போவீங்க.
: நிகமாந்த இதலாம் ஒரு பிரச்சனையா, ஏதாவுது EEE, Prod'ல இருந்து பிடிச்சிக்கிடலாம்.
: சரி, மேகத்தையும், கடவுளையும் எப்படி காட்டுவீங்க?
: நிகமாந்த், கிராபிக்ஸ்’ல காட்றோம்.
: ராகுல்!, நாம போடப் போறது கே.ஸ்.ரவிக்குமார் படம் மாதிரி ஒரு மசாலா, நீங்க ஷங்கர் மாதிரி யோசிக்கிறீங்க, காசு இல்ல பாஸ்.
:இதான்யா, இதான், James Cameroon, Steven Spielberg, இந்தா மாதிரி பெரிய கதை சொல்லிக்கிட்டு இருந்த நான், போனா போகுதுன்னு உங்களுக்கு சொல்ல வந்தா, நீங்க அது இல்ல, இது இல்லன்னு சொல்ல வேண்டியது, ஏதோ நீங்க காலுல விழுந்து கெஞ்சி கூப்பிடத்துனால நான் வந்தேன்.
:ராகுல், என்கங் சார், உங்க காலுல கெஞ்சி விழுந்து கேட்டாங்கால, நாம என்ன சொன்னாலும் கேட்க போறதில்ல, சரி சொல்லுங்க, உங்க ஆசைய கெடுப்பானேன், கடவுள் ரெண்டு பேரு மேகத்துக்குள உட்கார்ந்து பேசிக்கிறாங்க, அப்புறம்..
: என்ன பேசுறாங்கனா,
'தேவி, நான் ஒரு பூவை உருவாக்க ஆசைப்படுக்கிறேன்', அதுக்கு தேவி பதில் சொல்லுறாங்க
'இந்த பூவில் அப்படி என்ன அற்புதம், இது வாடாத பூவாக இருக்க போகின்றதா' அதுக்கு ஆம்பள கடவுள் சொல்லுறாரு, 'தேவி இது வாடாத பூவாய் மட்டும் ஆக்காமல், மற்ற பூக்களெல்லாம் இந்த பூவின் அழகினில் மயங்கி காம்பினில் தலை குனியும் படி செய்யப் போகிறேன், இதனை பார்க்கும் போதெல்லாம் பார்ப்பவர்கள் மனதில் தங்களின் கடந்த கால இனிய நிகழ்வுகள் எல்லாம் தோன்றும், அதனை பார்த்தாவாறு மெய் மறந்து நின்றுவிடுவர்.
"இனி ஏன் தாமதம் ஆரம்பம் ஆகட்டும் வேலைகள்" அப்படின்னு தேவி சொன்ன உடனே, கடவுள் கைய்ய தூக்கிராறு உடனே கீழ ஒரு மெல்லிய காத்து வீசுது, எல்லாப் பூக்களிலிருந்தும் வண்ணம் விட்டு விலகுது, அந்த வண்ணம் எல்லாம் ஒரு இடத்துல சேர்ந்து ஒரு சுழல் உருவாகுது, அப்புறம் அந்த இடத்துல ஒரு பூ உருவாகுது, அந்த பூ கடவுள் கையில வந்து சேருது.
" தேவனே, இதனை நான் சற்று தாங்கும் பாக்கியம் கிடைக்கும்மா?"
அப்படின்னு கைய்ய நீட்டுறாங்க. தேவனும் கைய்ய நீட்டுறார், இப்போ தான் ஒரு twist வைக்கிறோம்
"என்ன ராகுல் அந்த twist, பூ மேல DX அப்படின்னு எழுதிருக்கும் அதானே?!"
"தேவனே, இதனை நான், சற்று தாங்கும் பாக்கியம் கிடைக்கும்மா?"
அப்படின்னு கைய்ய நீட்டுறாங்க. தேவனும் கைய்ய நீட்டுறார், இப்போ தான் ஒரு twist வைக்கிறோம்
" என்ன ராகுல் அந்த twist பூ மேல DX அப்படின்னு எழுதிருக்கும் அதானே?!"
" நிகமாந்த் அதான் கிடையாது, பூ தவறி கீழ விழுந்திருந்து, அத அப்படியே நாம கிராபிக்ஸ்ல காட்டறோம், அப்படியே அந்த பூ கீழ வராத top shot காட்றோம் முதல universe, அப்புறம் solar system, அப்புறம் பூமி, அப்புறம் இந்தியா, அப்புறம் தமிழ்நாடு , அப்புறம் கோயம்புத்தூர், அப்புறம் நம்ம கல்லூரி, அப்புறம் நம்ம விழா நடக்கற இடம், டப்புன்னு மேடை நடுவுல ஒரு குட்டி focus light on பண்ணுறோம் அந்த focus light குள்ளிருந்து மெதுவா பூ சுழண்டு சுழண்டு கீழ விழுகுது, உடனே மேல தேவி 'நான் தவற விட்டேனே!’
,அப்படின்னு சொல்லுறாங்க, அதுக்கு தேவன் 'அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை தேவி, அது சேர வேண்டிய இடத்துக்கு தான் போயி சேருந்திருக்கு', இன்னும் நிறைய பூவை பொழிந்து ஆசிர்வதிப்போம் அப்படின்னு தேவன் சொல்லுறாரு உடனே, நாம விழா நடக்குற இடத்துக்கு மேல ஒரு பெரிய பலூன் வெடிச்சு அதுல்ல இருந்து பூவா வந்து விழுகுது, அப்படியே gladiator படத்தோட theme'ah போட்டு முடிக்கிறோம், எப்படி? “
: ஆஆஆஆ !!!!! முடியல ராகுல், முடியல, ஆனா அந்த பலூன் பூராம் பூ எப்படி ராகுல் வைக்கிறது?
: நிகமாந்த், சும்மா வண்ண காகிகத்துல எதாவுது வெட்டி, சுத்தி கித்தி வைப்போம் எடுத்து ஆராச்சியா பண்ணப் போறானுங்க, அப்படியே கொஞ்சம் ஜிகுணா கொட்டுவோம்.
: யோவ் ! கீழ கல்லூரி முதல்வர்லாம் உட்கார்ந்திருப்பாரு அவரு மேலலாம் கொட்ட முடியாதுயா.
: ஏன் தம்பி ஜிகுணா கொட்டுநீங்கனு கேட்டா, சார் ஜிகுணா தானே, ஜிகு ஜிகு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
: ஆம்மா, அவரு முன்னாடி இப்படி mood வந்தாப்புல பேசுங்க, அப்புறம் கல்லூரி விட்டே தூக்கிருவாரு.
: நிகமாந்த், பெயர பாருங்க 'ஜிகுணா', எவ்வளோ சூப்பரா இருக்கு 'ஜிகுணா', 'ஜிகுண்ணா' 'ஜிகுண்ண்ண்ணா' 'ஜிகு' ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
: உனக்கு என்னமோ ஆயிருச்சு, மூடிட்டு வேற யோசனை எதாச்சும்
சொல்லு.
: சரி அத விடுங்க, ஒரு வீட்டை காட்றோம், வெளியே ஒரே இருட்டு, அப்படியே வீடுக்குள மெதுவா போக போக, ஒரே ஒரு...
: ஏன் ராகுல் வெளிய ஒரே இருட்டா இருந்தா, எப்படி வீட்டை காட்ட முடியும்?.
: யோவ்! அதத் தான் சொல்ல வரேன், அந்த வீட்டுல ஒரே ஒரு அறையில மட்டும் மின் விளக்கு போட்டிருக்கு, அந்த அறைக்குள பார்த்தா, ஒரு focus lamp அடியில ஒரு வயசானவரு ஒண்ணு வரைஞ்சிக்கிட்டு இருக்காரு, அது என்னனு நாம காட்டக் கூடாது, அவர் முதுக மட்டும் காட்டிறோம், ஒரு பெரிய board'ல, ஒரு காகிதம், அந்த ஒவியரோட இடது கையில colour box , வலது கையில ஒரு பழைய brush, தலையில நிறையா நரைத்த முடி, இவ்வளோ தான் தெரியனும், அப்படியே camera'va முன்னாடி திருப்பிறோம் அவரு நெத்தியில சில பல கோடுகள காட்றோம் அவரு புருவம் தூக்கியிருக்கு, அவரு கண்ணாடி மூக்குல இறங்கி இருக்கு, அதோட chain கழுத்துல மாட்டி இருக்கு, கழுத்துல, மூஞ்சியில பூராம் சுருக்கம், ஆனா உதட்டுல லேசா ஒரு புன்னகை, கண்ணுல லேசா ஒரு குறும்பு தனம். வரைஞ்சிட்டு அப்படியே ஒரு easy chair'la உட்கிராறு, அத நாம long shot'la காட்றோம்.
இப்போ அப்படியே மெதுவா camera'va கிட்ட கொண்டு போறோம், top shot'la காட்றோம், அவரு எங்கையோ பார்க்கிறாரு, அப்படியே அவர் கண்ண zoom பண்ணி காட்டிறோம். கொஞ்ச நேரத்துல அந்த கண்ணுல தெரிஞ்ச ஒளி மங்கி போகுது, அப்படியே camera'va zoom out பண்ணுறோம், அவர் கையில வச்சிருந்த brush நழுவி கீழ விழுகுது, அந்த விழுகுற சத்தத நல்ல amplify பண்ணி போடுறோம், ஆனா அவரு முகத்துல மட்டும் சிரிப்பு இன்னும் இருக்கு. அப்படியே காட்சிய மெதுவா fade out பண்ணுறோம், காலையில அதே அறைய fade in பண்ணி காட்டிறோம். அவரு முகத்துல ஒரு தேஜஸ் தெரியுது, அப்படியே அவரு என்னை வரைஞ்சிருக்காருனு காட்டும் பொது டக்குனு அந்த காகிதம் board'ah பிச்சிக்கிட்டு பறக்குது, அப்படியே அத பின் தொடர்ந்து camera போகுது, அந்த காகிதம் காஞ்ச இழையோட சேர்ந்து புரண்டோடுது, நாமளும் பின்னாடியே போறோம், பக்கத்து வீட்டுக்குள்ள போயுருது, அங்க ஒரு சின்ன குழந்தை தவழந்து போயி அந்த காகித்த சிரிச்சிக்கிட்டே எடுக்குது.
அந்த குழந்தையோட அம்மா, அந்த குழந்தைய கூப்பிடிக்கிட்டே வராங்க ஆனா அவுங்க கூப்பிடுற வாயசைப்ப மட்டும் தான் நாம்
காட்டிறோம், அப்போ ஒரு சின்ன புயல் காற்று அடிக்கிற மாதிரி, அந்த குழந்தை கிட்ட இருந்து அந்த காகித்த பிடுங்கி எறிய பார்க்கிறாங்க ஆனா அந்த குழந்தை விட மாட்டீங்கது, ஒரே அழுகை, இப்போ அந்த காற்று கொஞ்சம் வேகம்மா வீசுறத காட்டிறோம், சரி குழந்தைய முதல உள்ள கூட்டிட்டு போனும்கிரதுக்காக, கையில காகித்த வச்சிருக்க குழந்தைய தூக்கிறாங்க, அந்த அம்மா குழந்தைய தூக்கிட்டு போறதா நாம பின்னால இருந்து காட்டிறோம் அந்த குழந்தை அந்த காகித்த இருக்கம்மா பிடிச்சிருக்கு, அப்போ அந்த காகித்த zoom பண்ணுறோம், அதுல என்ன எழுதி இருக்குன்னா, ஐயோ! எனக்கே முடியல ! நிகமாந்த்.
: சொல்லுங்க பெருசா என்ன எழுதி இருக்க போகுது DX தானே?!
: சரியா சொன்னீங்க, DX - it follows and excites your soul
: ஆஆஆஆஆஆஆ ! முடியல பாயங்கரம்மா இருக்கு, சரி வேற எதாவுது சொல்லுங்க, 11:30 இன்னும் அரை மணிநேரம் இருக்கு.
: எது இன்னும் அரை மணி நேரம் இருக்கா?!, நிகமாந்த் ஒரு மனுஷன் இதுக்கு மேல எப்படி நேரத்த ஓட்ட முடியும்.
: அதான் ராகுல் நீங்க இன்னொரு கதை சொன்னீங்கனா, அப்படியே ஓட்டிரலாம், கடைசி கதை நல்லா இருந்திச்சு.
: யோவ்! இதுக்கு மேல என்னால கதை சொல்ல முடியாது, வாங்க போயி நாய ஓட்டுவோம். வந்த ரெண்டு மணி நேரம்மா அது gear hobbing machine'aiyyae பார்த்திக்கிட்டு இருக்கு.
: ராகுல், அவன் ரெண்டு மணி நேரமம்மா பார்த்த விஷயத்த நாம் ரெண்டு நிமிஷத்துல கேட்டு தெரிஞ்சுக்கணும். வாங்க போவோம்.
: ஆஹா! என்ன ஒரு உயர்ந்த உள்ளம். அப்படியே செய்வோம்!!
haiyo kadavulae... naan'um indha kadhai'ya innum marakkala Raghul. Kandippa indha kadhai'ya en paiyyan kittayachu solli poda avan irukum bodhu DX la poda solren :P
ReplyDeleteBtw kaisee la 11.30 comedy remba arumai... Aana "enna oru uyarndha ullam". Indha dialogue enakku ennamo lezzzzzzzzzzza vanja pukazhchi madri...
Dei... Dei.. Dei... Ellarum blog uh padichitu poyiralaam... Aanaa naan note panniten...
ReplyDeleteKeezha paatheenga na reactions nu oru topic, adhula 3 choice..
Sari edho miga nandru, nandru, sumaar, mokkai nu irukum nu paathaa.....
Arumai Inimai Pudhumai aama..
Dei mollamari dei.......