Skip to main content

குதிக்குது குதிக்குது குதிரைக்குட்டி !!

காலங்காத்தால, வந்து இந்த 'போஹவ' சாபிடானும்மா அப்படின்னு
நொந்து போயி, தட்டுல கரண்டிய ஓங்கி அடிச்சாபுல வச்சேன். திரும்பி, மக்கள் இருக்கிற இடம் பார்த்தேன், ஒரே ஒரு மொக்க போடுற நாயி தான் உட்கார்ந்திருந்தான், இந்த அலுவலகத்துல ஒரு கெட்டப் பழக்கம்,ஒரு ஆள

பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ, பக்கத்துல அந்த சனியன் பக்கத்துல உட்கார்ந்தா ஆகணும், அவன் சொல்லுற மொக்கையே சிரிச்சிக்கிட்டே கேட்கணும் , அதுவும் இப்போ உட்கார்ந்திருக்கிறவன் ரொம்ப மோசம்,
அவன்கிட்ட உட்கார்ந்தோம் ஒசிளையே நம்மளபாராளுமன்றத்துல ஆரம்பிச்சு, அப்படியே ஜெர்மனிக்கு போயிட்டு, அமெரிக்காவுல விமானத்த வளைச்சு, திருப்பி நம்ம அலுவகத்துக்கு முன்னால இறக்கிருவான்.. ஆனா ஊனா 'see in US, there is a thing called...,' இவ்வளோ மொக்கைக்கும் கண்ணா நல்லா விழுச்சி, புருவத்த நல்லா தூக்கி, அப்-அப்போ ஆசிரியம்மா உச்சு கொட்டிடோம், கிளிஞ்சது...! அவன் ஒவ்வொரு பருக்கையா சாபிடுற ஆளு, காலையில சாப்பிட உட்கார்ந்தா மதிய பந்திக்கும் நேரம் வந்திரும்.

எனக்கு சில நேரம் சந்தேகம்மே வரும் நாம ஏதாவுது பைத்தியக்கார ஆஸ்பத்ரிக்கு வந்திடோம்மானு, ரெண்டு வருஷம்மா ஒருத்தன் ஒரே இயந்திர படத்த CATIA ல சுழட்டி-சுழட்டி பார்திக்கிட்டே இருக்கான், அலுவகதுக்குள்ள நுழைஞ்ச உடனே, ரெண்டு பெயரு தரைய பார்த்தவாரே, தலையாடிக்கிட்டே 'குட் மார்னிங்', மூஞ்சியில கொஞ்சம் கூட புன்னகை இல்லாம சொல்லுறானுங்க. நான் என்ன பண்ணுறேன்னு, என்னப் பண்ணப் போரேன்னு

நல்லா தெரிஞ்சுவசிக்கிட்டே, எங்க பார்த்தாலும், ராகுல் அப்புறம் என்ன

நடந்திக்கிட்டு இருக்கு, பேசுறதுக்கு ஒண்ணும் இல்லைன்னாஅமைதியா

போக வேண்டியது தானே, நான் ஒண்ணு சொன்னா இன்னொருத்தன்

சம்பந்தேமே இல்லாத ஒண்ண சொல்லி, என்னையும் குழப்பிவிடுறான்.

தினமும் என்னோட boss என் கிட்ட வந்து, '' ராகுல் அப்புறம் இன்னைக்கு என்னப் பண்ணப் போற, சொல்லு?''.
''சார் நீங்க சொல்லுங்க'னா'',
"இல்லப்பா நீ தான் சொல்லணும்",
" டேய்! அறிவுக்கெட்ட முன்டம் நீ தான்டா என் boss, நீ தான்டா நான் என்ன பண்ணனும்னு சொல்லணும்,
“இல்லை ராகுல் நான் உன் கிட்ட இருந்து நான் நிறையா initiatives எதிர் பார்க்கிறேன்”.
"அப்போ மொத்த்திள்ள உன் கிட்ட ஒரு வேலை இல்லாம என் கிட்ட வந்து, ஏதாவுது பண்ணுனு உயிரை வாங்கிற"

திடிர்ரின்னு ஏதோ ஒரு நாயி வந்து 'போச்சு!!, எல்லாம் போச்சு!!, இன்னும் பொருள் ஒண்ணும் வரலை , இன்னைக்கு உற்பத்தி பண்ண மாதிரி தான்', திடிருன்னு திரும்பி அதே நாயி சிரிக்குது, 'மாட்டுனானுன்களா!

உற்பத்திக்காரனுங்க, என்னம்மா பெரிய தலை முன்னாடி என்னா scene

போட்டானுங்க அவீங்க தான் எல்லாம் பண்ணுற மாதிரி, இப்போ தெரியுதா!!' அப்படின்னு கைய்ய தட்டி சிரிக்கிறான்'.


பொருள் வாங்கிரவனுங்க ஹிம்ச தாங்க முடியாது, பத்து பெயரு வருசையா உட்கார்ந்திருப்பனுங்க, ஒருத்தன் காலையில ஒன்பது மணிக்கு பொருள் பண்ணுற ஒருத்தனுக்கு தொலைபேசியில அழைச்சு கத்தாரம்பிப்பான், அவனுக்கு அடுத்தாப்புல உட்கார்ந்திருக்கவன் அவனும் இன்னொருத்தனுக்கு அழைச்சு கத்தாரம்பிப்பான், அப்படியே தொடர்ந்து ஒவ்வொருத்தான கத்த ஆரம்பிச்சு, கொஞ்ச நேரத்துல்ல மொத்த அலுவலகமும் கத்திக்கிட்டே இருக்கும், மதியம், சாயங்கால நேரத்துல அந்த பத்து நாயுங்க பத்து திசையை நோக்கி, கைபேசிய காதுல வச்சாப்புல, அலுவலுக வாசப்படியில நிண்ணு கத்திக்கிட்டு இருப்பானுங்க.


Print-out எடுக்கிற சத்தம், ஒரு பக்கம் ஆங்கிலத்துல பேசுற சத்தம், இன்னொரு பக்கம் மராத்தி, ஹிந்தி, தூரத்துள்ள வழுஞ்சி வழுஞ்சி பேசி காரியத்த சாதிக்கிற மூஞ்சி, கேட்காம என் பாக்கெட்ல கைய்யவுட்டு பேனா எடுக்கிற கை, நாற்க்காலியோட நாழு சக்குரத்துல தேஞ்சிப் போன ஒரு சக்கரத்துன்னால வர கடுப்பு, பக்கத்துல பாண் பராக்கு போட்டுக்கிட்டு எட்சிய வாயுல குதப்பிக்கிட்டு பேசுற நாய், வர கடுப்புக்கு எல்லாத்தையும் தூக்கிப் போட்டு நானும் பைதியத்தோடபைதியம்மா 'குதிக்குது குதிக்குது குதிரைக்குட்டி'ன்னு கத்திட்டு ஓடணும்ன்னு போல இருக்கு.

Comments

Popular posts from this blog

இரண்டு சிப்பாய்கள்

ஜெய விஜயீபவ!!..என்ற கோஷங்கள், சுற்றும் முற்றும் ஒலித்தது.. ரோஜா பூக்கள் பாதைகள் எங்கும் தூவி விடப் பட்டன..... எல்லா காலங்களிலும், பயந்தான்கொளிகள், கொடுத்த வேலையை செய்யப் பிடிக்காதவர்கள், எப்பொழுதும் குற்றம் கூறுபவர்கள், நக்கல் அடிப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள், அவர்களை ஏனோ இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், ஒளவையார்,கண்டறிந்து, கூற மறந்தார்களோ தெரியவில்லை. நான் இன்று எடுத்திக்கொண்டது அம் மாதரியான ஆட்களைத்தான்... :அடி ஏய், வெளியே வந்து எனக்கு வீரத் திலகம், இடப் போகிறாயா இல்லையா? உள்ளே இருந்து, ஒரு பெண்மணி வாயை அரைத்துக்கொண்டே வெளியே வந்தால் :உமக்கு எதுக்கு வீரத் திலகம், வெட்டியாக கூட்டத்தோடு கூட்டம்மாக போகிறவன் தானே நீ. :ஏன் கூற மாட்டாய், உன் அப்பனிடம் என் வீரத்தை பற்றி கேளும், சும்மா ஒன்றும் இல்லை, இரண்டு மாட்டை அடக்கி தான் உன்னை திருமணம் செய்தேன். :ரொம்ப ஒன்றும் கர்ஜிக்க வேண்டாம், நீங்கள் வருவீர்கள் என்று தெரிந்து நான் அந்த மாட்டிருக்கு இரண்டு நாள் உணவு வைக்கவில்லை. :ஏன் செல்லமே, என் மீது காதலா? :காதல் ஒன்றும் இல்லை தலைவனே, வீணாக என் வீட்டு காளைக்கு இறையாக வேண்டாம் என்று தான் விட்...

The broken twigs

I still remember the day I was given to choose either a computer or biology group, I was dead against biology, 'huh! who will prepare all those records and drawings', moreover studying the digestive system of frog didn't fascinate me either, nor calling the leaf as a modified shoot system, my botany sir, I guess felt botany boring than me, he always used to drool in the class throw chalk on the faces of the boys who slept other than himself, Zoology sir no different either, he used to sit himself under the fan and keep on saying so many technical terms and finally used to ask "have I made it simple?"..he used to murmur in class which he believes is 'teaching' and suddenly points a guy in the last bench and asks "Yaenda naan inga ivalo naeraammma kathikkittu irukaen nee anga enna pannikkittu irukka!"..ada paavi ithu thaan kathurathaa..hmm so I was out of league of biology, moreover blood is allergy for me and hence I was out of docr's league...

என்னைத்தாவுது போட்டு ஆட்டுங்க !!

எங்க கல்லூரியில ஒரு விழா, அதுல நாடகம், நடனம் கம்மியாவும் மொக்க ஜாஸ்தியாவும் எப்போவும்மே இருக்கும். நாடகத்துக்கு இடையில மேடையில வந்து சில பேறு குரல் மாத்தி பேசுறதும், சில பல ஒலியுடன் கூடிய ஒளிக் காட்சிகளையும் காட்டுறது வழக்கம். நானும் என் நண்பன் நிகமாந்துக்கும் எப்பொழுதும் இதான் வேலை, நாங்க சொல்லுறத கண்டிப்பா சேத்துக்க மாட்டானுங்கனு தெள்ளத் தெளிவா தெரிஞ்சிருந்தும், சும்மா எங்களுக்குள்ளையே பேசிப்போம் இப்படி இருந்தா எப்படி இருக்கும்னு. அந்த வகையா வந்த சில பல கற்பனைகளை, இங்க தூவி விட்டிருக்கேன். : ஏன் நிகமாந்த அந்த பெயர்க் காட்சிய இப்படி பண்ண என்ன? : எப்படி? : சொல்லுறேன் கேளுங்க, மேகதுக்குள்ள ஆண் கடவுள்ளும் பெண் கடவுள்ளும் பேசிக்கிறாங்க. : யோவ்! பெண் கடவுள் குரலுக்கு எங்க போவீங்க. : நிகமாந்த இதலாம் ஒரு பிரச்சனையா, ஏதாவுது EEE, Prod'ல இருந்து பிடிச்சிக்கிடலாம். : சரி, மேகத்தையும், கடவுளையும் எப்படி காட்டுவீங்க? : நிகமாந்த், கிராபிக்ஸ்’ல காட்றோம். : ராகுல்!, நாம போடப் போறது கே.ஸ்.ரவிக்குமார் படம் மாதிரி ஒரு மசாலா, நீங்க ஷங்கர் மாதிரி யோசிக்கிறீங்க, காசு இல்ல பாஸ். :இதான்யா,...