Skip to main content

பேருந்துப் பயணம்

சின்ன வயசுல இருந்தே, எனக்கு பேருந்துல பிரயாணம் பண்ண ரொம்ப பிடிக்கும், நெரிச்சல் இருந்தாலும், அடுத்தவன் என்ன பண்ணுறான், என்னென்ன பேசுறானுங்க, எந்தெந்த தோரணையில பேசுறானுங்க, எத்தனை விதம்மான மக்கள்கள், இவுங்கள எல்லாம், அவுங்களுக்கு தெரியாம ரசிக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப நெடுந்தூரம் பிரயாணம் அப்படின்னா இடையில வண்டி நிக்கிறதுண்டு.




எல்லாம் முடிஞ்சு, வண்டி எடுக்கிற நேரத்துல வேகம்மா ஓடி வந்து ஏறுற ஆளுங்க ஒரு ரகம், வேற எதாவுது வண்டியோட ஹாரன் சத்தத்த கேட்டு, நம்ம வண்டியா இருக்குமோனு வந்து பார்த்து ஏமாந்து போயி, எதுக்குடா வம்பு'னு சீக்கரம்மே வந்து உட்காருர ராகம் ஒண்ணு,





இடத்துக்காக துண்டு போட்ட இடத்துல, வேற ஒரு ஆள் உட்கார, கீழ தூக்கிப்போட்ட துண்டு எடுத்திக்கிட்டு அமைதியா இருக்கிற ரகம் ஒண்ணு, எடுத்த துண்ட கடுப்பா உதறிட்டு வண்டி கிளம்பின 20 நிமிஷத்துக்கு பிற்பாடு கொஞ்ச கொஞ்சாம முணுமுணுத்த வாய் சத்தம்மா சண்ட போட ஆரம்பிக்கிறது ஒரு ரகம்.





பொம்பளைங்க கிட்ட சிலிமிஷம் பண்ண உடனே பொங்கி எழுற கூட்டம் ஒரு ரகம், ஐயோ ! ஐயோ ! இப்படி பண்ணுறானே என்ன பண்ணுறது'னு தெரியாம முழிக்கிற சில பேர் ஒரு ரகம்.





கையுல குழந்தையோட கூட்டத்துல ஏறுற அம்மாவை, ஏம்மா இந்த நெரிசலுள குழந்தையோட ஏறுரனு திட்டுற ஆண்கள் ஒரு ரகம், நீங்க முதலுல ஏறுங்கனு வழிவுடுற ஆண்கள் ஒரு ரகம்.





வண்டில ஏறின அம்மா, குழந்தைய கேட்காமையே, மடியில உட்கார வச்சு, மாமா மடியில சமத்தா உட்கார்ந்திக்கனும்னு சொல்லுறது ஒரு ரகம், நீங்க உட்காருங்க இல்ல குழந்தையாவுது கொடுங்கன்னு கேட்டாலும், இல்ல கண்ணு நீ உட்காரு, நான் இந்தா இறங்கிருவேனு சொல்லி, ரொம்ப நேரம்மா குழந்தைய சுமந்த படியே பயணம் பண்ணுறவுங்க ஒரு ரகம்.





பேருந்து பூராம் கேட்கிறமாதிரி சத்தம் போட்டு பேசுற கூட்டம் ஒரு ரகம், எது நடந்தாலும் கண் கொட்டாம எதையோ நினைச்சு வெறிச்சோடி பார்க்கிற கூட்டம் ஒண்ணு.





நூறு ரூபாய் நோட்டு வாங்கி ரெண்டு ரூபாய் பயணச்சீட்டுக்கு சில்லுற கொடுக்கிற conductor ஒரு ரகம், ஐந்து ரூபாய் பயணச்சீட்டுக்கு, இருபது ரூபாய் நோட்ட வாங்கி, ஏன் ஐந்நூறுபாய் நோட்டு இல்லையானு நக்கலா கேட்கிற conductor ஒரு ரகம்.





எவ்வளோ சின்ன இடத்த கொடுத்தாலும் அதுல அமைதியா உட்காருர ரகம் ஒண்ணு, எவ்வளோ பெரிய இடம் கொடுத்தாலும் இன்னும் இடுப்ப இடுப்பால தள்ளுறது இன்னொரு ரகம்.





தான் இறங்கப்போற இடம் வந்திருச்சான்னு பக்கத்துல இருக்கிறவன்கிட்ட ஒரு தடவைக்கு மூணு தடவை கேட்டு, இறங்குற இடம் வரதுக்கு ரெண்டு 'ஸ்டாப்புக்கு' முன்னாலையே கம்பிய பிடிச்சு நிக்கிற ஆளுங்க ஒரு ரகம், தான் இறங்க வேண்டிய இடம் தாண்டினது கூட தெரியாம அடுத்த 'ஸ்டாப்புல' எல்லாத்தையும் இடிச்சிக்கிட்டு இறங்கிற ஆளுங்க ஒரு ரகம்.





பொது வாழ்க்கை, அரசியல், சினிமா இதப் பத்தி பேசுற ஆண்கள் கூட்டம் ஒரு ரகம். முன்னப் பின்ன தெரியாதவுன்களா இருந்தாலும், அக்கா தங்கச்சி மாதிரி நெருங்கி பேசுற பெண்கள் கூட்டம் ஒரு ரகம்.





பக்கத்துல உட்கார்ந்திருக்கிறவன் தூங்கும் போது தலை தோள்பட்டையில சாயும் போது, அதை கண்டுக்காம இருக்கிற ஆளுங்க ஒரு ரகம். அவன தட்டி தட்டி எழுப்பி, ஏன்யா உன் தலைய சாயிக்காதனு, மூஞ்சிய கடுப்பா வச்சி சொல்லுற ஆளுங்க ஒரு ரகம்.





மழை பெஞ்சு ஒஞ்ஜ நேரத்துல, ஈரப்த்தாம்மான எதிர் காற்றுள முகத்த காட்டும் போது என்ன ஆனத்தம்.





வாகனச் சக்கரம் சாக்கடையும், சேத்தையும் வாரி அடிச்சாலும், பேருந்துக்கு மட்டும் ரோட்டோர மரம் மஞ்சப்பூவைத்தான் பொழிந்தது.

பேருந்து நிலையத்துல விக்கிற கடலைய எடை போட்டா வித்தான்?, மூணு ரூபாய் போட்டனத்துல பதினைந்து கடலைக்கு மேல இருந்ததுண்டா, இல்லை அதை விட குறைஞ்சிருந்த்தான்னுண்டா !!. ஆயிர ரெண்டாயுற கதை, அறிவியல் புத்தகம் வீட்டுல இருந்தாலும், சாப்பிட்டு முடிச்ச கடலை பொட்டலத்துல இருக்கிற துண்டு செய்தியை ரசித்ததுக்கு ஈடாகும்மா?!. conductor அவரோட பையா குழுக்கி குழுக்கி சில்லறைய எடுக்கிற சத்தம், கே.கே.நகர் எல்லாம் வெளியா வாங்க, இந்தா, உள்ள போங்கம்மா அதான் அவ்வளோ இடம் கடக்குல, அப்புறம் சீட்டுவாங்கியாச்சா? , விசில் சத்தம், கே.கே.நகர் எல்லாம் வெளிய வாங்க, மறுபடியும் விசில் சத்தம் கியர் மாத்துற சத்தம், குழந்தைங்க அழுற சத்தம், அரசியல் பேசுற சத்தம், பேருந்துப் பயணத்தோட நாம வாழ்க்கை பயணத்தையும் மனசுல நினைச்சவாரு அசப்போட்டுக்கிட்டே போறத்துல தான் என்னவொரு ஆனந்தம். !!

Comments

  1. Inimai...
    Naanum rasithadhu undu... Adhai miga miga azhgaai varnithirukureer!!!

    Naan idhai padithuvittu... ov'voru vagai'yilum naam endha vagai edru enni paarthu rasithen :)

    Kadalai vaangi thindru naanum andha aanandha vigadan paper'ai padithu magizhndhu ullen... :)

    Migavum rasitha varigal: Conductor 500ruba illaya nu ketpadhu, iduppai iduppaal idippadhu!!! :D :D

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இரண்டு சிப்பாய்கள்

ஜெய விஜயீபவ!!..என்ற கோஷங்கள், சுற்றும் முற்றும் ஒலித்தது.. ரோஜா பூக்கள் பாதைகள் எங்கும் தூவி விடப் பட்டன..... எல்லா காலங்களிலும், பயந்தான்கொளிகள், கொடுத்த வேலையை செய்யப் பிடிக்காதவர்கள், எப்பொழுதும் குற்றம் கூறுபவர்கள், நக்கல் அடிப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள், அவர்களை ஏனோ இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், ஒளவையார்,கண்டறிந்து, கூற மறந்தார்களோ தெரியவில்லை. நான் இன்று எடுத்திக்கொண்டது அம் மாதரியான ஆட்களைத்தான்... :அடி ஏய், வெளியே வந்து எனக்கு வீரத் திலகம், இடப் போகிறாயா இல்லையா? உள்ளே இருந்து, ஒரு பெண்மணி வாயை அரைத்துக்கொண்டே வெளியே வந்தால் :உமக்கு எதுக்கு வீரத் திலகம், வெட்டியாக கூட்டத்தோடு கூட்டம்மாக போகிறவன் தானே நீ. :ஏன் கூற மாட்டாய், உன் அப்பனிடம் என் வீரத்தை பற்றி கேளும், சும்மா ஒன்றும் இல்லை, இரண்டு மாட்டை அடக்கி தான் உன்னை திருமணம் செய்தேன். :ரொம்ப ஒன்றும் கர்ஜிக்க வேண்டாம், நீங்கள் வருவீர்கள் என்று தெரிந்து நான் அந்த மாட்டிருக்கு இரண்டு நாள் உணவு வைக்கவில்லை. :ஏன் செல்லமே, என் மீது காதலா? :காதல் ஒன்றும் இல்லை தலைவனே, வீணாக என் வீட்டு காளைக்கு இறையாக வேண்டாம் என்று தான் விட்...

The broken twigs

I still remember the day I was given to choose either a computer or biology group, I was dead against biology, 'huh! who will prepare all those records and drawings', moreover studying the digestive system of frog didn't fascinate me either, nor calling the leaf as a modified shoot system, my botany sir, I guess felt botany boring than me, he always used to drool in the class throw chalk on the faces of the boys who slept other than himself, Zoology sir no different either, he used to sit himself under the fan and keep on saying so many technical terms and finally used to ask "have I made it simple?"..he used to murmur in class which he believes is 'teaching' and suddenly points a guy in the last bench and asks "Yaenda naan inga ivalo naeraammma kathikkittu irukaen nee anga enna pannikkittu irukka!"..ada paavi ithu thaan kathurathaa..hmm so I was out of league of biology, moreover blood is allergy for me and hence I was out of docr's league...

என்னைத்தாவுது போட்டு ஆட்டுங்க !!

எங்க கல்லூரியில ஒரு விழா, அதுல நாடகம், நடனம் கம்மியாவும் மொக்க ஜாஸ்தியாவும் எப்போவும்மே இருக்கும். நாடகத்துக்கு இடையில மேடையில வந்து சில பேறு குரல் மாத்தி பேசுறதும், சில பல ஒலியுடன் கூடிய ஒளிக் காட்சிகளையும் காட்டுறது வழக்கம். நானும் என் நண்பன் நிகமாந்துக்கும் எப்பொழுதும் இதான் வேலை, நாங்க சொல்லுறத கண்டிப்பா சேத்துக்க மாட்டானுங்கனு தெள்ளத் தெளிவா தெரிஞ்சிருந்தும், சும்மா எங்களுக்குள்ளையே பேசிப்போம் இப்படி இருந்தா எப்படி இருக்கும்னு. அந்த வகையா வந்த சில பல கற்பனைகளை, இங்க தூவி விட்டிருக்கேன். : ஏன் நிகமாந்த அந்த பெயர்க் காட்சிய இப்படி பண்ண என்ன? : எப்படி? : சொல்லுறேன் கேளுங்க, மேகதுக்குள்ள ஆண் கடவுள்ளும் பெண் கடவுள்ளும் பேசிக்கிறாங்க. : யோவ்! பெண் கடவுள் குரலுக்கு எங்க போவீங்க. : நிகமாந்த இதலாம் ஒரு பிரச்சனையா, ஏதாவுது EEE, Prod'ல இருந்து பிடிச்சிக்கிடலாம். : சரி, மேகத்தையும், கடவுளையும் எப்படி காட்டுவீங்க? : நிகமாந்த், கிராபிக்ஸ்’ல காட்றோம். : ராகுல்!, நாம போடப் போறது கே.ஸ்.ரவிக்குமார் படம் மாதிரி ஒரு மசாலா, நீங்க ஷங்கர் மாதிரி யோசிக்கிறீங்க, காசு இல்ல பாஸ். :இதான்யா,...