Skip to main content

என்னமோ போங்க!

இதை என் diary'la எழுதெலாம்னு நினைச்சேன், சரி எல்லாத்துக்கும் பொருந்தும் நினைச்சு இங்க போட்டிருக்கேன். ஆண்டவன், என்னை நினைச்சு நம்மள படச்சான்னு தெரியல, ஆனா நாம ஒவ்வொரு காரியம் பண்ணும் போதும் மனசுல கண்டிப்பா நினைப்பு ஓடும், அந்த நினைப்பு சில நேரத்துல தான் ஒரு முகப் பட்டிரிருக்கும், பல நேரம் இரண்டு விதம்மா சிதறி கிடக்கும், இப்போ உதாரணத்துக்கு, கல்லூரியில படிக்கும் போது நடந்தத சொல்லுறேன், ராத்திரி சாபிடுற நேரம், சனிக்கிழமை, உள்ள நல்லா

இருக்காது, வெளிய போகணும்னு தோணும், ஆனா தனியா போகப் பிடிக்காது, நண்பன ஒருத்தன் வருவான்

: ராகுல், வா டா வெளிய போவோம்?

இந்த கேள்விய கேட்ட உடனே நம்ம மனசு ரெண்டா பிரிஞ்சி வேலை செய்ய ஆராம்பிச்சிரும்

: இவன் கூட போலாம், ஆனா இவன் கூட இன்னொருத்தன் கண்டிப்பா வருவான், அவனுக்கும் நமக்கும் ஆகாது.

: டேய்! ,அவன் வந்திட்டு போறான், நீ இவன் கிட்ட உட்காரு, உள்ள நல்லா இல்ல, அப்புறம் ஏன் போலன்னு வருத்தப் பட போற.

: என்னத்த, இவீங்க குள்ளையே பேசிக்கிட்டு இருப்பானுங்க, நாம தனியா உட்காரனும்.

: இப்படியே இருக்காத, போடா, என்ன அஞ்சு மணிநேரம் உட்கார மாட்டீயா ? !

: அப்படி போயே ஆகணும்மா, பக்கத்துல தனியா போய்க்கிடலாம்.

: டேய், இன்னொரு கோஷ்டி அங்க தான்டா வரும், அப்புறம் கேட்ப்பானுங்க 'ஏன் டா தனியா வந்த?' அப்படின்னு...

இது நடக்கும் போதே, வாயி யோசிக்காமையே வழக்கம்மான கேள்விய கேட்கும்

:எங்க போறீங்க?, எத்தன மணிக்கு?, எதுல call taxi'ah?..திடிர்னு பேசிக்கிட்டு இருந்தவன்

: டேய் அவன் வரான்னு தானே வரல

அப்படின்னு மனசுல இருக்கிறத பட்டுன்னு கேட்கும் போது

: !!, அதெல்லாம் ஒண்ணும் இல்ல, என்னால உண்மையிலேயே முடியல, உள்ளையே சாப்பிடலாம்னு பார்க்கிறேன், நீங்க போயிட்டு வாங்கனு நல்ல பையன் மாதிரி நடிக்க வேண்டியது.

இந்த மாதிரி சம நோக்கோட சில நேரம் தான் மனசு யோசிக்கும், விடுதியில இருந்து கல்லூரி போற வழியில பொண்ணுங்க நிறையா போய்க்கிட்டு இருக்கும், எல்லாரும் பார்க்கிறது உண்டு, அவுங்களுக்கும் தெரியும் நாம பார்க்கிறது, நமக்கும் தெரியும் அவுங்க நாம பார்க்கிறத பார்த்திடாங்கனு இருந்தாலும் நாம அவுங்களுக்கு, தெரியாம மறைஞ்சி மறைஞ்சி பார்க்கிறதும் அவுங்க நாம பார்க்கிறத கவனிக்காத மாதிரி போறது தான் உண்மையான உலக நடிப்பு, அதுலயும் நான் வந்த முத ஆண்டுல பார்க்கக்கூடாது அதெல்லாம் தப்புன்னு இருந்தேன், ரெண்டாவுது ஆண்டுளுலாம் சும்மா தலைய குனுஞ்சி பார்கிரதேல்லாம் கிடையாது, பொண்ணு தூரத்துல வரதுல இருந்து , என்னை தாண்டி போற வரைக்கும் கண் கொட்டாம பார்ப்பேன். அப்பெல்லாம் மனசுல இந்த குறும்பு மனசு துள்ளும்

:அட டா என்ன அழகு, ச!, இந்த பாலா போன Mechanical course எடுத்ததுக்கு ஒரு FT எடுத்திருந்தெருக்கெல்லாம் , atleast ஒரு IT இல்ல ஒரு CSE , ஆஹா!! நல்ல வாயிப்ப தவற விட்டிடுனே! , அங்க பாரு சனியன் கருப்பட்டி மாதிரி இருக்கான், அவ ரசகுல்ல மாதிரி இருக்கா, அவனுக்கெல்லாம் மாட்டிருக்கு நமக்கு ஒண்ணும் மாட்ட மாடீங்கதே!, அந்த சிரிப்ப பாரு அப்படி என்ன பெருசா joke அடிச்சிருக்க போறான், முதல கோழி வந்ததா இல்ல முட்டை வந்ததான்னு மொக்கையா போட்டிருப்பான், அதுக்கு என்னமோ இப்படி சிரிக்கிறா...
இந்த மாதிரி ஆள் கூட வந்தாலும், தனியா வந்தாலும், மனசுக்குல அந்த பொண்ண பத்தி ஓடும், இன்னும் கொஞ்ச தூரம் போனவுடனே, இன்னொரு மனசு , இது வந்து தத்துவும், நியாம், தர்மம், பேசுற மனசு, கொஞ்சம் வேகம் கம்மி, தொட நடங்கி
:சரி விடு டா , இல்லாததும் நல்லதுக்கு தான், இருந்தா பசங்க ஓட்டுவானுங்க, ஒருத்திக்காக நூறு பேருட்ட சண்ட போடணும்,..
இன்னொரு மனசு திருப்பி பொங்கும், இந்த மனசு தான் முதல பொண்ண பார்த்தவுடனே பேச ஆரம்பிச்ச மனசு, இதுக்கு கொஞ்சம் தைரியம், கேலி பேசுறது, தம் அடிச்சா என்ன?, தண்ணி ஒருக்கா அடிச்சு தான் பார்போம்மே, வேகம் ஜாஸ்தி , யோசிக்காம வேலைய செய்ய தூண்டும், அது திருப்பி பேச ஆரம்பிக்கும்
: இருந்தாலும் அந்த கருப்பட்டிக்கு கிடைச்சத பொறுத்துக்க முடியல, அந்த சனியனுக்கு, எறுமை மாடு ரெண்டு காலுல நடந்து வந்த மாதிரி இருக்கான், ஐயோ!!!...
: விடு டா! , போயிட்டு போகுது அவ பார்த்தா ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி தெரியுறா, இவன் தான் நூல் விடுறான், அவ வருத்த பட போறா, இனிமேல் அப்படி பார்க்காத...
எல்லாத்துக்கும் இந்த மாதிரி தான் நினைக்கிறேன், எப்பவும்மே ரெண்டா மனசு யோசிக்கும், எந்த நேரத்துல எது ஓங்கி இருக்கோ , அது தான் நாம செய்யுற காரியம்மா ஆயிரம், இதுல என்ன ஒரு அழகுன்னா, ஒரு மனசு துள்ளலா இருந்தா இன்னொரு மனசு அமைதியா இருக்க தூண்டும், ஒரு மனசு கோவப் பட்டு பேச தூண்டினா, இன்னொரு மனசு வீனா எதுக்கு சண்டைனு விடு போகட்டும் அப்படின்னு கட்டு படுத்தும், ஒண்ணு சந்தேக படுத்த தூண்டும், இன்னொன்னு பழைய நியாபகங்கள கொண்டு வந்து அப்படி எல்லாம் இருக்காது, அப்படியே இருந்தாலும் தெரியாம நடந்திருக்கும்னு சொல்லும், ஒண்ணு செய் இன்னொன்னு அத செய்யாதுன்னு சொல்லும், இதுல எது எவ்வளவு நேரம் ஓங்கி இருக்கோ அது தான் ஒருத்தன் குணம்மா நமக்கு தெரியுது, இங்க வேலைக்கு வந்த பிறகு இந்த ரெண்டு பேறு சத்தம் மனசுல அதிகம் ஆயிருச்சு, நானே நடந்து போகும் போது சில நேரம் நிண்ணு யோசிப்பேன், யாரு டா இவீங்க ரெண்டு பேறு உள்ள கத்திக்கிட்டே இருக்கனுங்கனு.

சரி எது எப்படியோ, புத்தாண்டு வருது எல்லாரும் எல்லா வளமும் பெற வாழ்த்துகிறேன், சந்தோஷமா இருக்க அப்பப்போ, உங்களுக்குள்ள இருக்கிற சின்ன பையன எழுப்புங்க, கேலியும் கூத்தும் வாழ்வில் எப்போதும் தேவை, சரி டா டேய் கத்தாதீங்க கிளம்பியாச்சு, நீங்களும் வாழ்த்து சொல்லுங்க,

: ஆமா, பெருசா என்னத்த சொல்ல, இருப்பது நாழு வருஷம்மா நல்ல இருப்போம்னு தான் வாழ்த்திறோம், அது நடக்கிறது தான் நடக்குது,

: இவன் எப்பவும்மே இப்படி தாங்க, கண்டிப்பா நீங்க எல்லாரும் சந்தோஷாம இருப்பீங்க, நல்லதே உங்களுக்கு நடக்க போகுது, மனமார வாழ்த்துகிறேன், சரி ஒரு அரை மனமார... :):D !!!

Comments

  1. Nee pune la irukaradhum nalladhu than da Raghul.. Namboorla irundhirundha indha "2" perum ivlo pesa maatanga illa? Apdiye, Aryaas, vada kada, saravana bhavan nu saayungaalam ellam odi irukum..

    Ulla thonuradha ellam apdiye ezhudhradhuku oru dhairiyam venum..

    You re evolving..!

    ReplyDelete
  2. Concept perfect da Raghul... Really enjoyed d 2 different mind voices. Even I hav experienced the same. Bt climax la vacha twist dhaan saar ultimate'u. Really enjoyed it.

    Aama ivan ennatha perusa eludhi kilichaan nu nee ivana ipdi paaraatura? Concepy pazhasu dhaan. Ivanae adhe concept la oru blog eludhirukan. Andha ECE erumaya dhaan solraan nu therinjudhu. Liked it.Climax ennamo ah ha, oh ho nu avan solra alavukku illana kooda,konjam nalla dhaan irundhuchu.

    Ennadhu! "Konjam" nalla'va? Ada paavigala. Neenga'laam edha dhaan da paaratuveenga? Andha 'arai manasu' dialogue unmailiyae super'o super. Avan kidakkaraan Raghul. It was superb...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இரண்டு சிப்பாய்கள்

ஜெய விஜயீபவ!!..என்ற கோஷங்கள், சுற்றும் முற்றும் ஒலித்தது.. ரோஜா பூக்கள் பாதைகள் எங்கும் தூவி விடப் பட்டன..... எல்லா காலங்களிலும், பயந்தான்கொளிகள், கொடுத்த வேலையை செய்யப் பிடிக்காதவர்கள், எப்பொழுதும் குற்றம் கூறுபவர்கள், நக்கல் அடிப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள், அவர்களை ஏனோ இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், ஒளவையார்,கண்டறிந்து, கூற மறந்தார்களோ தெரியவில்லை. நான் இன்று எடுத்திக்கொண்டது அம் மாதரியான ஆட்களைத்தான்... :அடி ஏய், வெளியே வந்து எனக்கு வீரத் திலகம், இடப் போகிறாயா இல்லையா? உள்ளே இருந்து, ஒரு பெண்மணி வாயை அரைத்துக்கொண்டே வெளியே வந்தால் :உமக்கு எதுக்கு வீரத் திலகம், வெட்டியாக கூட்டத்தோடு கூட்டம்மாக போகிறவன் தானே நீ. :ஏன் கூற மாட்டாய், உன் அப்பனிடம் என் வீரத்தை பற்றி கேளும், சும்மா ஒன்றும் இல்லை, இரண்டு மாட்டை அடக்கி தான் உன்னை திருமணம் செய்தேன். :ரொம்ப ஒன்றும் கர்ஜிக்க வேண்டாம், நீங்கள் வருவீர்கள் என்று தெரிந்து நான் அந்த மாட்டிருக்கு இரண்டு நாள் உணவு வைக்கவில்லை. :ஏன் செல்லமே, என் மீது காதலா? :காதல் ஒன்றும் இல்லை தலைவனே, வீணாக என் வீட்டு காளைக்கு இறையாக வேண்டாம் என்று தான் விட்...

கொடுமை!

"உங்க ஊரு சாப்புடுல மட்டும் அப்படி என்ன ராகுல் இருக்கு , எல்லாத்திலையும் அரிசிய போடறீங்க, காலையில இட்லி சாம்பார், மதியம் சோறும் சாம்பார், திருப்பி சோறும் ரசம், திருப்பி சோறும் தயிரும், உங்களுது என்னமோ ரொம்ப நல்லா இருக்கிற மாதிரி, அதுக்கு ரொட்டி எவ்வளவோ தேவலாம்.." (மனசில் ஒரு குரல்) ராகுல்! பொறுத்தது போதும் பொங்கி ஏழு! டேய் ! நாதாரிகளா நானும் ஏதோ corporate உலகம் எதுக்கு சண்ட போடணும் சிரிச்சி!, சிரிச்சி!, சமாளிக்கலாம் அப்படின்னு பார்த்தா கடைசியில எங்க சாப்பாட்ட பத்தி கேவலமா பேசி எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிடீங்க. "என்னது எங்க சாப்பாடு கேவலம்மா இருக்கா! அடப் பாவிகளா! டேய் உங்க சாப்பாடு நல்லா இருக்குனு சொல்லி இருந்தா போனா போகுதுன்னு விட்ருப்பேன், எங்க சாபாடைய்யா குறை சொல்லுற, நீங்க வக்கிர இந்த ரொட்டி, பருப்பு, பச்ச அரிசி இத விட, டேய் நல்லா கேட்டுக்கோ இத விட எங்க வாழை இலையில அவியல், பொரியல், வறுவல், ஊருக்காய், சாப்பாடு, சாம்பார், ரசம், தயிர், பாயாசம், இதெல்லாம் எவ்வளோ மேல் டா!, எங்க சாப்பாடு கேவலம்மா இருக்கா, மனசாட்சின்னு ஒண்ணு உங்களுக்கு இருக்கா, மத...

என்னைத்தாவுது போட்டு ஆட்டுங்க !!

எங்க கல்லூரியில ஒரு விழா, அதுல நாடகம், நடனம் கம்மியாவும் மொக்க ஜாஸ்தியாவும் எப்போவும்மே இருக்கும். நாடகத்துக்கு இடையில மேடையில வந்து சில பேறு குரல் மாத்தி பேசுறதும், சில பல ஒலியுடன் கூடிய ஒளிக் காட்சிகளையும் காட்டுறது வழக்கம். நானும் என் நண்பன் நிகமாந்துக்கும் எப்பொழுதும் இதான் வேலை, நாங்க சொல்லுறத கண்டிப்பா சேத்துக்க மாட்டானுங்கனு தெள்ளத் தெளிவா தெரிஞ்சிருந்தும், சும்மா எங்களுக்குள்ளையே பேசிப்போம் இப்படி இருந்தா எப்படி இருக்கும்னு. அந்த வகையா வந்த சில பல கற்பனைகளை, இங்க தூவி விட்டிருக்கேன். : ஏன் நிகமாந்த அந்த பெயர்க் காட்சிய இப்படி பண்ண என்ன? : எப்படி? : சொல்லுறேன் கேளுங்க, மேகதுக்குள்ள ஆண் கடவுள்ளும் பெண் கடவுள்ளும் பேசிக்கிறாங்க. : யோவ்! பெண் கடவுள் குரலுக்கு எங்க போவீங்க. : நிகமாந்த இதலாம் ஒரு பிரச்சனையா, ஏதாவுது EEE, Prod'ல இருந்து பிடிச்சிக்கிடலாம். : சரி, மேகத்தையும், கடவுளையும் எப்படி காட்டுவீங்க? : நிகமாந்த், கிராபிக்ஸ்’ல காட்றோம். : ராகுல்!, நாம போடப் போறது கே.ஸ்.ரவிக்குமார் படம் மாதிரி ஒரு மசாலா, நீங்க ஷங்கர் மாதிரி யோசிக்கிறீங்க, காசு இல்ல பாஸ். :இதான்யா,...