R.Vivek@naaikutti is classic guy, short, lean guy, sporting very short shorts J, rudraksham, thick vibhooti on fore-head, always a smile on lips, gentleness, purity and brilliance all twinkling at the same time on his eyes, old styled hair and so on, everything is class…
:டேய்! ராகுல்! எனக்கு முடி வெட்டி விட்டவரு இன்னைக்கு “எப்படி பா உன் முடி இப்படி soft'a இருக்கு, நீங்க என்ன shampoo use பண்ணுறீங்க” அப்படின்னு கேட்டாரு..
:டப்புன்னு சொல்ல வேண்டியது தானே கக்கூஸ் தண்ணியில குளிச்சி, கூவ நதி காற்றுள உளற வைக்கிறேன்னு, இவருக்கு பெரிய பாண்டிய நாட்டு ராணியோட கூந்தல்னு நினைப்பு, இயற்கையிலே பொசு பொசுன்னு இருக்கா இல்ல செயற்கையா வந்ததான்னு கேட்டிருக்காங்க, இப்படிலாம் சொன்னாதான் அடுத்த வாட்டி இவன் வருவான்னு சொல்லி இருப்பானுங்க...
:உனக்கு இந்த மாதிரி முடி இல்லன்னு பொறாம..
:ஆமா! இவர பார்த்து எனக்கு பொறாம, ஆமா உன் resume achievements'la எதுக்கு நீ district champion 100 metres'nu பொய் சொல்லிருக்க.
:பொய்யா!! அடப் பாவி உண்மையிலயே நான் champion டா!!
:சூப்பர் விவேக்! சூப்பர்! எழும்புக்கூடுக்கு மேல தோல போர்த்தன மாதிரி ஒரு உடம்பு நீ district champion'a?, அப்படியே அது உண்மையா இருந்தாலும், ஓட்டப் பந்தையத்துல முதாலவத வந்ததலாம் ஒரு சாதனையா, ஏதோ நாய் துரத்தன மாதிரி ஓடியிருப்ப, அதுக்கு அந்த லூசுங்க district champion'nu பட்டம் கொடுத்திருக்கானுங்க....
:எங்க, நீ ஓடு பார்ப்போம் அந்த மாதிரி..
:நான் எதுக்கு டா நாய் மாதிரி ஓடணும், நீ குரங்கு மாதிரி குதுச்சி high jump'la first'nu வாங்குவ, என்னையும் அந்த மாதிரி பண்ண சொல்லுவ, மனுஷன் மாதிரி ஏதாவுது பண்ணுடா...
:நான் 10th'la district first இப்போ சொல்லு...
:ஏதோ ஒரு செவுத்துல தலைய முட்டி முட்டி படிச்சிருப்ப இதெல்லாம் ஒரு சாதனையா..
:உங்களுக்கு அப்புறம் எதுங்க சார் சாதன, சொல்லுங்க..
:டேய்! சாதன-கிறது வேற டா அதலாம் உனக்கு சொல்ல முடியாது
:டேய் ! சும்மா, நீ school'la ஒண்ணும் பண்ணல, பண்ணவன சொல்லுது நாய்..
:நீங்க என்ன சார் அப்படி பண்ணி இருக்கீங்க, செவ்வாய் கிரகத்துக்கு satellite அனுப்பிச்சீங்களா, சும்மா ஏறுமை மாட்டு வாழுல தீய பத்த வச்சா, அது கூட ஓடும் அதுக்காக அது சாதனையா ஆயிரும்மா!!, அவன்-அவன் encylopedia'va படுச்சு எல்லாத்தையும் ஒப்பிக்கிறான் இந்த நாய் ஏதோ புழுக்க மாதிரி ரெண்டு book'a படிச்சிருக்கு இதெல்லாம் ஒரு achievement'a..
:நான் சும்மா இருந்ததுக்கு ஏதோ பண்ணி இருக்கேன்ல, நீ என்ன பண்ணின..
:இந்த மாதிரி பண்றதுக்கு சும்மாவே இருக்கலாம்..ஆமா இது என்ன டான்ஸ் ஆடிருகேன்னு எழுதிருக்க..
:நான் 6'th-தோ, 7th-தோ படிக்கும் போது ஆடினேன்...
:என்ன பாட்டுக்கு?
:5 6 7 8 அஹ ஊப்ஸ் கூடி பேபி, கம்மான் டெல் மீ பேபி...
: ஊரே கை கொட்டி சிரிச்சிருக்கும்மே...
:தெரியல, ஏதோ ஆடினேன், மறந்து போச்சு..
:நாய்க்கு காக்கா வலிப்பு வந்தா எப்படி ஆடுமோ, அந்த மாதிரி ஆடிருப்ப!! ஹ்ம்ம்....
ஒரு வட்டம் ஊருக்கு போய்ட்டு வந்தவன், " டேய்! ராகுல் ரூமுக்கு வா என்னனென videos எடுத்திட்டு வந்திருக்கேன் பாரு", ‘அட பரவைல்லையே நம்ம விவேக் கூட videos எடித்திட்டு வரானே' அப்படின்னு ஆசையா அவன் ரூமுக்கு போன்னேன், கண்ணனுக்கு முதல தெரிந்தது ரெண்டு கோணி பையில இருக்கிற டப்பா நிறைய உருண்ட தான், அவன் கணிப்பொறிய துடங்குரதுக்குள்ள என் கை ரெண்டு உருண்டைய எடுத்து மெதுவா சாப்பிட ஆரம்பிச்சிரும், இங்க பாரு அப்படின்னு சொல்லுவான், டப்பாக்குள்ள சிக்கிக்கிட்டு இருந்த கைய மெதுவா எடுத்து தலையில அடிச்சேன் பூராம் IIT lecture videos, எதோ வெளிநாட்டு கல்லூரியில எடுத்த வகுப்பறை videos, இந்த மாதிரி 20GB கு பூராம் மொக்கையா இருந்தது,
“ராகுல் இத பார்த்து நாம அடிச்சு நவத்துறோம்” அப்படின்னு மனசாட்சியே இல்லாம சொல்லுவான் நானும் கேடாப்-பல்லுல சிக்கிக்கிட்டு இருந்த உருண்ட மாவ நாக்கால எடுத்த படியே “ஹ்ம்ம்ம்” அப்படின்னு சொல்லி இன்னும் ரெண்டு உருண்டைய எடுத்து வாயில போடுவேன், அந்த குற்றத்துக்காக "டேய்!, இத பாரு ௦.001 நொடியில நடக்கற combustion process எவ்வளோ அழகா காற்றிகாணு" ...
"டேய்! மத்தவீங்க கொண்டுவர videos'la வே என்னலாமோ அழகா காட்டுறானுங்க, அத பார்த்து அடுச்சு நவத்துரானுங்க பசங்க, ஏதோ உன்னோட உருண்டைய சாப்டேன்கிற பாவத்துக்காக இத பார்த்து அடிச்சு நவத்த சொல்லுற”, அப்படின்னு அவன மனசுல திட்டிக்கிட்டே சாப்பிடுவேன். ரொம்ப அருமையா இருக்கும் உருண்டை ஒண்ணுகப்புரம் ஒண்ணு வாய்க்குள்ள போறதே தெரியாது, டப்பா நிறைய இருந்தது திடிர்னு மட்டத்துக்கு வந்திரும், நான் கஷ்டப்பட்டு கைய்ய டப்பாக்கு அடியில நுழச்சி உருண்டைய எடுக்கிறத பார்த்து,
"டேய்! கொஞ்சுமாவுது வை'டா, நாளைக்கு சாப்பிடுவோம்னு சொல்லுவான்",
"டேய்! விவேக் கடைசியா ஒரு உருண்ட” அப்படின்னு இன்னும் ரெண்டு உருண்டைய எடுத்து வாயில போட்டு மெதுவா கிளம்பிருவேன்...
"மணி 7 ஆச்சு இன்னும் அந்த நாய் சாப்பிட வராம என்ன பண்ணிக்கிட்டு இருக்கு, பரிச்சைக்கு ரொம்ப ஜாஸ்தியா படிக்கிற மாதிரி இருக்கு" அப்படின்னு என் மனசுல நினச்சிக்கிட்டு வெளிய வந்து அவன்
அறை பக்கம் திரும்பி பார்த்தா, ஒரே இருட்டு ஆனா சத்தம் ஜாஸ்தியா வரும், கிட்ட போக போக, பார்த்தா ஒருத்தன் கதவ பிடிச்சு தொங்குவான், நாலு பேறு அவன் முன்னாடி நிப்பானுங்க, விவேக்கோட பாதி மூஞ்சி மட்டும் கதவுக்கிட்ட இருக்கிற ரெண்டு கழுத்து இடைவெளியில தெரியும்,
"கொஞ்சம் தள்ளிக்கோ நான் உள்ள போய்க்கிறேன்",
"எது!! உள்ள போகுரியா, நானே அறை மணிநேரமா வெளிய நின்னு கதை கேட்கிட்டு இருக்கேன் நீ இப்போ வந்து உள்ள போகணும்னு சொல்லுற"
"ஒரே நிமுஷம் உள்ள போயிட்டு வெளிய வந்திருவேன்", அப்படின்னு
அவன சமாளிச்சி உள்ள போய் பார்த்தா விவேக் இடது பக்கத்துலையும், வலது பக்கத்துலையும் மூணு-மூணு பேறு ஏதோ சீக்கு வந்த கோழி மாதிரி குறுகி போய் உட்கார்ந்திருப்பானுங்க, அவன் பின்னால நாலு பேறு tube-light'a மறைச்சி நின்னுக்கிட்டு இருப்பானுங்க, அது போக இன்னும் சில பேரு ஒத்தக் காலுல குனிஞ்சு வளைஞ்சு நின்னுக்கிட்டு இருப்பானுங்க, விவேக் அழகா நடத்திக்கிட்டு இருப்பான், கண்ணுல தீப்பொறி பறக்க "டேய்! இங்க இது இருக்கும் அதுக்கடியில இது வரும் ரெண்டுத்தையும் நடுல coupler'a வச்சு connect பண்ணியிருப்பானுங்க..." அப்படின்னு கையிலையே ஒரு மாயஜால உலகத்த உருவாக்கிட்டு இருப்பான், நடுவுல "டேய்! விவேக் எனக்கு இது மட்டும் சொல்லு அந்த part எங்க வரும்"னு எவனாவுது பின்னால இருந்து கேட்ப்பான், டப்ப்னு விவேக் "அதான் சொன்னேன்ல டா அது இங்க வரும்னு" அவன் கற்பனையா காத்துல உருவாக்கிய பொருளுள காட்டுவான்... அதுக்கு அவன் "ஒ! அப்போ இது இங்க வரும், இது அங்க வரும்..ok ok இப்போ புரியுது" அவனும் விவேக்கோட மாய உலகத்த காட்டி சொல்லுவான். பார்க்கவே பிரம்மிப்பா இருக்கும், விவேக் எந்த அளவுக்கு புரிஞ்சிருக்கானோ அதே அளவுக்கும் மத்தவீங்களையும் புரிய வக்கிரதுல ரொம்ப கெட்டிக்காரன்...
அவன இந்த நேரத்துல "டேய்! விவேக் சாப்பிட வா"னு கூப்பிட்டா, சுத்தி நிக்கிரவுனுங்க சேருந்து பொது மாத்து போட்டாலும் போட்-றுவானுங்க, அது நாலா “டேய் விவேக்!..” அப்படின்னு மெதுவா இழுப்பேன், அவன் தலைய தூக்கி பார்த்து "டேய் ! அஞ்சு நிமுஷம் நான் வந்திரேன்" அப்படின்னு சொல்லிட்டு திரும்பி உள்ள இறங்கிருவான்.. பின்னாடி இருந்து ஏவனாவுது ஒருத்தன் "டேய் விவேக் நீ அது நடத்தும் போது நான் இங்க இல்ல நீ போய் சாப்பிட்டு வந்திட்டேனா, அந்த நேரத்துல நான் படிச்சிருவேன், அப்புறம் சேர்ந்து படிக்கிறதுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்"னு சொல்லுவான்.. "அப்படியா சரி வா போவோம்"னு சொல்லி வெளிய வருவான்..
வெளிய வந்ததும் கேட்ப்பான் "டேய்! மணி 7 தாண்ட ஆகுது இப்போ போனா, எல்லாரும் சிரிப்பானுங்க"
"ஏன்! எட்டு மணிக்கு வந்தா உனக்கு award கொடுத்து கௌர படுத்துவானுன்களா, லூசு எட்டு மணிக்கு வந்தா தோசை கிடைக்காது வெறும் கை-குட்ட தான் கிடைக்கும்"
"டேய்! ஒரு எழ்ட்ரைக்காவுது வருவோம் டா"
"டேய்! எழ்டரைக்கு கூட்டம் ஜாஸ்தியா ஆயிடும்"
"நான் எப்படியும் எழுமிச்ச சாதம் தான் சாப்பிட போறேன்"
"நீ எத வேணாலும் சாப்பிடு, ஆனா ஒழுங்கா மூடிட்டு எனக்கு ரெண்டு தோச வாங்கித்தா"
வரிசையில நிக்கும் போது நெஞ்சுல இருந்த பயம் டப்புன்னு வாயுல வந்திரும் "டேய்! விவேக் அத படிக்க ரொம்ப நேரம் ஆகும்மாடா?"
"அதலாம் இல்ல டா ஒரு மணி நேரத்துல படிச்சிரலாம்"
"டேய் ! போகும் போது லேசா சொல்லிட்டு போய்டேனா நான் அப்படியே படிச்சுக்குவேன்”
இந்த மாதிரி பல முறை கை கொடுத்திருக்கான் விவேக், placement நேரத்துல நான் எத்தன வட்டம் ஒரேயித திருப்பித் திருப்பி கேட்டாலும் சொல்லிக் கொடுப்பான். நான் 'படிச்ச' materials எப்பவாது வந்து கேட்பான், ஆரம்பிச்சு அர மணிநேரம் கூட ஆயிரக்காது அதுக்குள்ளே பல கேள்வி கேட்டு (எல்லாம் அடிப்படியான கேள்வி) கொளப்பிருவான்.. இவீங்கலாம் ஒண்ணுமே கிடையாது அப்படின்னு நிறிபிக்கிறதுக்கு, seniors அவிங்க அறைக்கு எங்க வகுப்பு ஜாம்பாவானுங்கள கூப்பிட்டு விட்டானுங்க, ஜாம்பாவணுல விவேக் இல்லாமையா.. அவீங்களும் ஒரு அரை மணிநேரம் விட்டு திருவிளையாடல் வர நாகேஷ் மாதிரி விட்டு தாக்கினானுங்க, விவேக் அசராம பதில் சொன்னான், நொந்து போய் இவன மடக்குறதுக்கு சின்ன வகுப்புல படிச்ச avagadro hyphothesis, அது இதுன்னு விட்டு தாளிச்சானுங்க, நம்ம ‘ஆளா கொக்கா’ பொறுமையா எல்லாத்துக்கும் பதில் சொன்னான், உள்ள இருந்து தலையில கைய்ய வச்சிக்கிட்டு அவிங்க வெளிய வந்தாயிங்க...
காலையில நான் பல் விலக்கிட்டு இருக்கும் பொது விவேக் தூங்கு மூஞ்சியோட காலைக் கடன் முடிக்க போய்க்கிட்டு இருந்தான், நான் "கொள்ள பக்கம் போகாத கொட்டிகடக்கு ஜாங்கிரி, சு சு மாரி"அப்படின்னு பல்ல விளகிக்கிட்டே பாடினேன், பேய்ய பார்த்து பயந்து ஓடி வர மாறி வந்தான்
"டேய், என்னடா இவ்வளோ மோசம்மா இருக்கு, நீ எங்க டா போன்ன"
"ரெண்டாவுது மாடியில கொஞ்சம் பரவா இல்ல, அங்க போ"
இத சும்மா விடக்கூடாதுன்னு முடிவெடுத்து ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு கடிதம் எழுதினோம் விடுதி காப்பாளர்க்கு
நான் சொன்னேன் " ஒரு நாள், நீ இங்க வந்து 'இருக்கிற'"
விவேக் : "டேய் ! இது ரொம்ப over டா இதுக்காக அவன் காலையில வருவான்னா"
:சரி அப்படினா இப்படி எழுது, டேய் நாயே! நீ வந்து பாரு டா மனுஷன் இங்க ‘போக’ முடியும்மானு"
:இப்படிலாம் எழுதினா அவன் படிச்சி கிழிச்சு போற்றுவான்
:டேய் எப்படியும் பெயர எழுத போறது இல்ல, நல்லா திட்டியே எழுதிருவோம்
: டேய் அப்படிலாம் எழுதினா எந்த நடவிக்கையும் எடுக்க மாட்டான் டா
: ஆமா இல்லாட்டி போன்னப்புல வந்து கழுவி விட்டு தான் மறு வேலை பார்க்க போறனா
: டேய் சொன்னா கேளு இப்படி எழுதுவோம், “விடுதி ஆசிரியரே தினமும் ரெண்டு மாடி ஏறி காலைக் கடன் முடிக்கிற அவலை நிலை இருக்கு, கழுவுரவுங்க கிட்ட சொன்னா அவுங்க நீங்க G2 மட்டும் நல்லா கழுவ சொன்னதா சொல்லுறானுங்க, நாங்க வந்து விடுதிக்ன்னு வருஷம் இவ்வளோ ரூபாய் தரோம், இந்த மாடியில 30 அறை இருக்கு அதாவுது 60 பேறு இருக்கோம், அது போக சேவைக்ன்னு வேற மாசம் மாசம் தரோம், அதவாது இத கழுவறதுக்கு இவ்வளோ தரோம்னு “
: எதுக்கு கணக்குப் பிள்ளை எழுதிற மாதிரி எழுதிற, உன் பிள்ளைய இங்க தங்க வைப்பிய நாயே அப்படின்னு ஒரு வாக்கியத்துல எழுது, அப்படியே அந்த கழிப்பறைய ரெண்டு புகைப்படம் எடுத்து சேர்த்து அனுப்புவோம்.
: டேய்! பாவம் டா
: என்ன டா பாவம், அப்போ நம்ம பாவம் இல்லையா, உங்க ஊரு தூத்துக்குடி பொது கழிப்பறை விட மோசம்மா இருக்கும் போல..
:ஏன் sir, உங்க ஊரு விருதுநகர்ல மட்டும், பளிங்கு கறக்கலாம் போட்டு எப்பவும்மே சுத்தமா வச்சிருப்பாங்களா, நாயி உங்க ஊர்ல ஒண்ணுமே கிடையாது, மத்தவீங்கள சொல்லுது ...
: எங்க ஊர்ல என்னடா இல்ல, வர்த்தகம்னாலே எங்க ஊரு தான், கேரளாவுல விளையுற ஏலக்காய் கூட எங்க ஊருக்கு வந்திட்டு தான் வெளிநாட்டுக்கே போகும், எங்க ஊரு சந்தையில எப்பவும்மே ஏலக்காய் வாசம் அடிக்கும், உங்க ஊருல கருவாட்டு வாசம் தானே அடிக்கும், “அம்மா கருவாடு வாங்கிறீங்களா கரு....
: மூடு நாயே ! நீ சோத்துக்கு உப்பு போட்டு தானே சாப்பிடுற, அந்த உப்பு எங்க இருந்து வருது எங்க ஊருல தான்..
:பெருசா உப்பு பண்ணுரைன்கலாம் உப்பு, எங்க வீட்லலாம் நாங்க டாட்டா உப்பு தான் பயன் படுதிறோம், அது ஒண்ணும் உங்க ஊருல இருந்து வரல, தூத்துக்குடி உப்புன்னு எவனாவுது விக்கிறானா, ஆனா விருதை பொரட்டானு விப்பானுங்க..
:விப்பானுங்க டா, தூத்துக்குடி உப்புனே விப்பானுங்க
:தூத்துக்குடியில மட்டும் வித்திருப்பானுங்க, நான்லாம கேள்வி பட்டதே கிடையாது.
:விருதுநகர் பொரட்டாவாம், நானும் கேள்வி பட்டதே கிடையாது, சும்மா சொல்லு, நானும் சொல்லுவேன் தூத்துக்குடி இட்லின்னு..
:டேய் உண்மையிலே டா, சாத்தூர் காராச்சேவு, திருநெல்வேலி அல்வா மாதிரி விருதுநகர் பொரட்ட டா!!, எல்லா ஊர்லையும் பொரட்டாவ, சப்பாத்தி போடுற மாதிரி போடுவீங்க, நாங்க எண்ணையிலே பொரிப்போம். அந்த பாட்டுல கூட வருமே 'அண்ணாச்சி கடையில எண்ணையில தீக்குளிச்ச பொரட்டாவ வாங்கி தின்னு சொத்த அளிச்சோம்னு', எவனாவுது 'தூத்துக்குடி முத்து, உப்புன்னு, இட்லி'ன்னு பாடிருக்கானா..
:படம் பெயரே வெய்யில், ஊருல வெயில தவற ஒண்ணும் கிடையாது.
:ஏன் sir, உங்க ஊருல சுவிட்சர்லாந்த் மாதிரி குளு குளுன்னு இருக்கும்மா, உங்க ஊருலையும் நாற்பது தானே!, தூதுக்குடியாம் தூத்துக்குடி அங்க என்ன டா இருக்கு எங்க ஊருல இதயம் நல்லெண்ணெய் இருக்கு.
:தம்பி எங்க ஊருல SPIC இருக்கு, harbour இருக்கு..
:பெருசா துறைமுகம், சென்னைக்கும் கொலம்போவுக்கும் போறவன் வழியில ஒண்ணுக்கு அடிக்கிறதுக்காக கப்பல கொண்டு வந்து நிப்பாட்டி இருப்பான், பெருசா துறைமுகம் வச்சிருக்காயங்கலாம்.. அது வழியா இது வரைக்கும் ஒரு கப்பலாவுது விற்றுக்கீங்கலாடா.
:ஏன் ஒண்ணுக்கு அடிக்க உங்க ஊருல வந்து நிப்பாட்ட வேண்டியது தானே.! எதுக்கு எங்க ஊருல வந்து நிப்பாட்டுறான்.
:எங்க ஊருக்காரைங்க ஒண்ணும் உங்கள மாதிரி கிடையாது, ஒண்ணுக்கு அடிகிறதுக்கெலாம் நாங்க விட மாட்டோம், வர்த்தகம் மட்டும் தான்.
:உங்க ஊருலையும் ஏலக்கா மூட்டைய, ஒண்ணுக்கு அடிக்கிறதுக்காக நிப்பாட்டி இருப்பான்.
: டேய்! butter beans அப்படினா என்னனு தெரியும்மா, அது விளையுறதே ஏற்காடு, உதகமண்டலம் இந்த மாதிரி மலையிலே தான், ஆனா இது வரைக்கும் நான் அத கோயம்புத்தூர்ல பார்த்தே கிடையாது, சேலதுளையும் கிடையாது, எங்க ஊருக்காரைங்க அத அப்படியே விளைஞ்ச உடனே அல்-லிருவானுங்க. அந்த காலத்திலையே இத பாடி இருப்பானுங்க 'மாயவரம் ஏறு ஒட்டி, வயக்காட உழுது போடு செல்ல கண்ணு , அத விருதுநகர் வியாபாரிக்கு வித்துப்போட்டு பணத்த ஏன்னு செல்லக்கண்ணு'. கிங் மேக்கர் காமராஜர் எங்க ஊரு, உங்க ஊருல யாரு சார்
:வ.உ.சி எங்க ஊரு, அவரு அங்க தான் கப்பல் விட்டாரு.
:கப்பல் உட்டாராம், ரெண்டு கட்டுமரத்த தூக்கி கடலுல போற்றுப்பாறு, உடனே பின்னாடி நின்னவுங்க கை தட்டி இருப்பாங்க, அத வச்சு உங்க ஊரு மக்ரூனையும், முத்தையும் தூக்கிட்டு போய் வெளிநாட்டுல வித்திட்டு வந்தீங்களா, செத்துப்போன மீனை தானே எத்து-நீங்க..
:என்ன பண்ணாங்கனு தெரியும்மா, சும்மா ஏதாவுது சொல்லு...
:come, lets go and eat dude ( ஐயோ! இத நான் சொல்லலீங்க, நேரம் ஆயுடுத்து இரவு மணி 9, பூனா, வெளிய தென்றல் காற்று {எங்க ஊரு காற்று வந்து இந்த ஊரில் வீசுதடி}, இப்ப தான் மழை பெஞ்சு ஓயஞ்சிருக்கு)
:just gimme 5 minutes dude (இது நான் தான்)
விவேக் அப்படினாலே அவன் சிரிச்ச முகம் தான் மனசுக்கு வரும், அவனுக்கும் கோவம் வரும், ஆனா அப்போ அவன் மூஞ்சிய காட்ட மாட்டான், மல்லாக்க, மின்சார கம்பத்துல அடி பட்ட காக்கா மாதிரி கவுந்து படுத்திருவான், நிறையா அவனை பத்தி சொல்லலாம், "டேய் வா ஹரி பவனம் போவோம்"னு நான் சொல்லுவேன், அவன் "சொன்னா கேளு, ஆர்யாஸ் போவோம், இல்லாட்டி அருணாச்சலாஸ் போவோம்"னு முதல் ரெண்டு வருஷம் பழக்கி விட்டான், அதுக்கப்புறம் எனக்கே அசைவம் சாப்பிட ஒரு மாதிரி ஆயிருச்சு, கோழி கறி சாப்பிடும் போதெல்லாம் ஏதோ ரப்பர் கடிக்கிராப்புல இருக்கு. இப்போ எல்லாம் சுத்த சைவம் தான். நான் "டேய் மக்கள் கோவா , கொச்சின்னு போறாங்க நாமளும்.." "நாம கோவிலுக்கு போலாம்" அப்படின்னு அவன் சொல்லி மலைக் கோவில், ஸ்ரீரங்க கோவில், உக்கடம் கோவில்னு எல்லாம் கோவிலுக்கும் கூட்டிட்டு போய், கையில அப்பர்-திருஞானசம்பந்தர் மாதிரி திருவோடு ஏந்தாத ஒரே குறை தான், எல்லாக் கோவில பத்தி சொல்லி, எல்லா சாமிய பத்தியும் சொல்லி மனசுல ஒரு ஆன்மீகத்த உண்டு பண்ணிட்டான். இப்படி நிறைய சொல்லலாம், யானை உடம்பு எவ்வளோ பெரியதோ, அந்த அளவுக்கு அதோட கண்ணு சிறியது, அந்த மாதிரி விவேக்கோட பழகிய அனுபவங்கள் எவ்வளோ பெரியதோ, அந்த அளவுக்கு இந்த blog சிறியது,... நாளை (19/08/2010) பிறந்த நாள் கொண்டாடும் என் நண்பன் விவேக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..
ச.ராகுல்
18.08.2010
Raghul thalaivaaaaaa...!!! Romba naal ennada blog eh kaanome nu wait pannitu irundhen.. Soooper...!!! Adikadi ezhudhu da..
ReplyDeletePerfect description of the situations da... ZOOBER... I can actually imagine each situation perfectly as it wud hav been...
ReplyDeleteMy personal favorites-
ஏதோ சீக்கு வந்த கோழி மாதிரி குறிகி போய் உட்கார்ந்திருப்பானுங்க :D :D ROFLMAO
அவன் பின்னால நாலு பேறு tube-light'a மறைச்சி நின்னுக்கிட்டு இருப்பானுங்க, அது போக இன்னும் சில பேரு ஒத்தக் காலுல குனிஞ்சு வளைஞ்சு நின்னுக்கிட்டு
இருப்பானுங்க :D :D :D
என்ன டா பாவம், அப்போ நம்ம பாவம் இல்லையா, உங்க ஊரு
தூத்துக்குடி பொது கழிப்பறை விட மோசம்மா இருக்கும் போல
:ஏன் sir, உங்க ஊரு விருதுநகர்ல மட்டும், பளிங்கு கறக்கலாம் போட்டு எப்பவும்மே சுத்தமா வச்சிருப்பாங்களா, நாயி உங்க ஊர்ல ஒண்ணுமே கிடையாது, மத்தவீங்கள சொல்லுது ...
:D :D :D :D
ஒண்ணுக்கு அடிக்கிறதுக்காக கப்பல கொண்டு வந்து நிப்பாட்டி
இருப்பான்
:D :D
ல்லாக்க, மின்சார கம்பத்துல அடி பட்ட காக்க மாதிரி கவுந்து படுத்திருவான் :D :D LOL LOL