நானும் அப்பாவும் எப்பவும் சேர்ந்து market’ku போவோம், அன்னைக்கு அப்பா சொன்னாரு “டேய் நாம இன்னைக்கு ஒரு வீட்டுக்கு போயிட்டு போவோம்”னு...நாங்களும் அந்த வீட்டுக்கு போயாச்சு, வண்டிய அப்பா stand போடும் போதே நான் சொன்னேன், அப்பா நான் இங்கவே இருக்கேன் பா, அதுக்கு அப்பா “டேய் சும்மா வாடா”னு என்ன வம்படியா கூட்டிட்டு போனாரு உள்ள போனதும் நாங்க பார்க்க வந்தவரு,“வாங்க சந்திரன் உங்கள தான் எதிர்பார்த்திக்கிட்டு இருந்தேன்”, எங்க அப்பா கூட கொண்டுவந்த documents'a எடுத்து அவர்ட கொடுத்தாரு, அவரு வாங்கிட்டு “அட சந்திரன் இதுக்கு இப்ப என்ன அவசரம் நாளைக்கு office’ல கொடுக்க வேண்டியது தானே”,நான் மனசுக்குள்ளையே யோசிச்சிக்கிட்டு இருந்தேன் “அப்புறம் ஏன்யா காலையில இருந்து எதிர்பார்த்த”னு “Sir,இவன் சின்னவன், மூத்தவன் வீட்ல இருக்கான் அவன் எப்பவும் class first இவன் ஸ்மார படிப்பான், இத இப்போ நொல்லனும்மா இதுக்கு தான் நான் வண்டிக்கிட்டையே நிக்குரேனு சொன்னேன்”,அப்படின்னு மனசுல திட்டிகிட்டேன்,அப்புறம் அவுங்க வீடு introduction நடந்தது ஆனா அவரு விவரம்மா சின்னவுங்க பெரியவுங்க அப்படின்னு சொல்லி நிறுதிக்கிட்டாறு, அவ்வளோ தான் கிளம்பிருவாங்க அப்படின்னு நினைச்சா எங்க அப்பா அவர் boss’a பத்தி பேசி பொலம்ப ஆரம்பிச்சிட்டாரு அவரு உடனே உட்காருங்க அப்படின்னு சொல்லி ரெண்டு பேரும் சேருந்து நல்லா “சார் அவன் சரி இல்ல, சார் இவன் சரி இல்ல சார்’னு சும்மா office’ல எல்லாத்தையும் விட்டு திட்டு திட்டு’னு திட்டிக் கிட்டு இருந்தாங்க நான் பக்கத்துல உட்கார்ந்து தரையவே பார்த்துக்கிட்டு இருந்தேன், திடீர்னு என் பார்வைய மறைகிராப்புல ஒரு தட்டு நீட்டினாங்க பாத்தா அதுல நிறைய பஜ்ஜி சுடச் சுட, அந்த எண்ணெய் bubbles வெடிக்கிற சத்தம் இன்னும் அதுல கேட்டுக்கிட்டு இருந்தது,“எடுத்துக்கோப்பா” அப்படின்னு சொன்னாங்க…எடுத்து அப்படியே சாப்பிடனும்னு ஆசை ஆனா என்ன பண்றது manners“இல்ல aunty எனக்கு வேண்டாம், இப்ப தான் நிறையா சாப்பிடேன்னு ஒரு புருடா விட்டேன். அவுங்களும் “சும்மா சாப்பிடுப்பா ரெண்டு பஜ்ஜி சாப்பிட்டா ஒண்ணும் செய்யாது” அப்படின்னு அவுங்களும் compel பண்ணாங்க. நானும் வயித்து பசிய மறைச்சி, மனசு ஆசையும் மறைச்சி வேண்டாம் வேண்டாம்னு ஒரே scene. அப்புறம் அப்பா “டேய் சும்மா சாப்பிடுடா”. சரின்னு ரெண்டு எடுத்து ஏதோ வேண்டா வெறுப்போட சாப்பிடற மாதிரி ஒரு scene இதுக்குள்ள நாக்குல நல்லா எச்சி வேற ஊற ஆரம்பிச்சிருச்சு. ரெண்டு தான் சாப்பிடனும் அதவும் decent’a சாப்பிடனும்,decent’னா கீழ எதுவும் விழுந்திர கூடாது, விரல தாண்டி எண்ணையோ, சட்னியோ படர கூடாது, சாப்பிடும் போது சத்தம் கேட்க கூடாது,இது எல்லாம் முடிஞ்சு சாப்பிட்டு முடுச்ச பிறகு இன்னும் ரெண்டு கொடுங்கன்னு கேட்க கூடாது!!.ரெண்டு நிமுஷதுல சாப்பிட வேண்டியத வாய தொடச்சி, மெதுவா சாப்பிட்டு முடிக்க இருபது நிமுஷம் ஆயிருச்சு.அதுகப்புரம்மும் வயுறு பசி தீரல, திரும்பியும் compel pannaanga இன்னும் ஒரு பொருக்க சாபிட்டாலும் வயிரே வெடிச்சுரும் அந்த அளவுக்கு வயுத்த புடுச்சு முடியாது aunty, seriousa அப்படின்னு ஒரே acting actual'a வயுதல அப்போ சம பசி, அப்புறம் தம்பி coffee’a tea’a அப்படின்னு கேட்டாங்க நான் விட்ருந்தாலும் வேணாம்னு தான் சொல்லி இருப்பேன் ஆனா அதுக்குள்ள அப்பா முந்திக்கிட்டு “இல்லங்க அவன் காபி டீ’லாம் சாப்பிட மாட்டான் , எனக்கு மட்டும் காபி சக்கர கொஞ்சம் கம்மியா”, “அப்போ பாலு இல்ல bournvita எதாவுது ”, “இல்லங்க வேணாம் , வேணாம் , குடிக்கிரீயாடா அப்படின்னு என்ன வேற பார்த்து ஒரு sound விட்டாரு , “இல்ல வேணாம்னு சொல்லி , மீண்டும் மனசுக்குள்ளையே 'ஹ்ம்ம் நீங்களே நல்லா எல்லாத்தையும் வாங்கி குடிங்க எதுக்கு அந்த bournvita மட்டும் விட்டு வச்சிருக்கீங்க அதையும் வாங்கி ஊத்திகோங்க உங்க வாயில' அப்படின்னு திட்டு திட்டுனேன் ..sidela எங்க அப்பா வேற "இல்லங்க இவிங்க காலையில பால் குடிக்க வக்கிரதுக்கே படாத பாடு படனும் விட்ருங்க" அப்படின்னு சொல்லிட்டாரு …'ஆமம்மா வீட்ல போடுற horlicks’a நீங்க தான் குடிக்கணும் அவ்வளோ கேவலம்மா இருக்கும், அத குடுச்சி ரெண்டு வீட்டு நாய் சொறி பிடுச்சு சுத்துதே' அப்படின்னு மனசுல ஒரு பதில்…என் கைல வேற அந்த பஜ்ஜி ஈரம் காஞ்சிக்கிட்டு இருந்தது, அத பார்க்க பார்க்க வேற ஆசை அதிகமாயிட்டுகிட்டே இருந்தது , எட்சிய முழுங்கி “ uncle தண்ணி“ அப்படின்னு சொன்னேன் “தம்பிக்கு தண்ணி கொடு ” அப்படின்னு ஒரு sound விட்டாரு “ஹாம் இந்தா வரேன்” அப்படின்னு உள்ள இருந்து சத்தம் கேட்டது “இல்ல uncle கை கழுவ “ “சும்மா உள்ள போ பா, ஏய் இந்த தம்பிக்கு கை கழுவுனும்மா கொஞ்சம் பாரு”, ஹ்ம்ம் நான் கை கழுவி தண்ணி குடிக்கணும் நீங்க சுட சுட காபி டீ ’ஆ...உள்ள போக போக அந்த பஜ்ஜி எண்ணையில வதைக்கிற வாசம் ஏற்கனவே எறிஞ்சிக்கிட்டு இருந்த என் வயுத்த இன்னும் எரிய வச்தது , பசியோட கை கழுவினேன்....
இன்னை வரைக்கும் அந்த பழக்கம் விட்ட பாடு இல்ல எப்போலாம் friends வீட்டுக்கு போறேனோ அப்போலாம் இந்த பிரச்சன இருந்துகிட்டே தான் இருக்கு friends வீட்ல சாப்பிட உட்கார்ந்ததும் பக்கத்துல யாரவுது பெரியவுங்க நின்னு பரிமாறுவாங்க “இல்ல வேணாம் நாங்களே போட்டு சாப்டிக்கிறோம்” அப்படின்னு லேசா ஒரு முயற்சி பண்ணி பார்ப்பேன். “இருக்கட்டும் பா ” அப்படின்னு தான் பதில் வரும்…இப்படி தான் ஒரு வாட்டி பிரதீப் வீட்டுக்கு போகும் போது ரொம்ப பசி , நானு , ஆந்த, அப்புறம் பிரதீப் மூணு வேரும் உட்கார்ந்தோம். சனியன் புடுச்ச ஆந்த ஏற்கனவே எங்கையோ நல்லா கொட்டிருக்கும் போல ரெண்டே ரெண்டு வாய் வக்கிர மாதிரி சாப்பாடு சாபிட்டு எழுந்திருச்சிட்டான், அப்பளம் எடுக்க உள்ள போனவுங்க உண்மையிலையே மிரண்டு போய்டாங்க “ஏன்பா சாப்பாடு சரி இல்லையா”னு, "இல்லங்க நான் மதியம் அவ்வளவா சாப்பிட மாட்டேன்னு" விட்டான்! அட பாவி இப்ப நான் மட்டும் உட்கார்ந்து சாப்பிட நல்லா இருக்காதுன்னு சாம்பார் அடுத்து direct’a மோரு, ஹ்ம்ம் அவ்வளோ இருந்தது வடை பாயசம்னு எல்லாத்தையும் miss பண்ணினேன், கேட்டதுக்கு "aunty பாயாசம் சாப்பிட்டா சளி புடுசிக்கும்னு நானும் விட்டேன்!. பிரதீப் மட்டும் "இன்னும் போடுமா! போடுமா" நல்லா வாங்கி சாப்பிட்டான் அவன் சாப்பிட்டு முடிக்க அர மணி நேரம் ஆச்சு அது வரைக்கும் நான் ஏதோ கிடந்த ஒரு புக் வாசிச்சிக்கிட்டு இருந்தேன். பக்கம் மட்டும் தான் திரும்பிச்சு அதுவும் அவன் எப்போலாம் தயிர விட்டு உருண்சிநானோ அப்போலாம் பசியோட பக்கத்த திருப்பினேன்...
இப்போ விவேக் வீட்டுக்கு போகும் போது கூட, நான் அவுங்க வீட்டுக்கு 7 மணிகெல்லாம் போய்டேன், பசி வயிர சுண்டி எடுத்திக்கிட்டு இருந்தது , எல்லாரும் வந்திரடுமனு wait பண்ணி பண்ணி 9 மணி ஆயிருச்சு , அதுக்கப்புறம் சாப்பிட உட்கார்ந்தேன் பசி வயுத்த கில்லி எடுத்தது , எல்லாரும் எவ்வளோ சாபிடுரானுங்க அந்த வேகத்துல நானும் சாப்டேன் விட்ருந்தா ஒரு சட்டி இட்லி சாபிட்டுயிருந்திருப்பேன், விவேக் பாட்டியோட இட்லி வேற அவ்வளோ சூப்பரா இருந்தது, படு பாவி பசங்க எனக்கு ரெண்டு மூணு போதும் எழுந்திடானுங்க… பசி வயுத்த கில்லிக்கிட்டே இருந்தது சரின்னு வழக்கம் போல பசியோட கைய்ய கழுவினேன் , எல்லாரும் உட்கார்ந்து கதை பேச ஆரம்பிச்சுடானுங்க "டேய் வாங்கடா அப்படியே வெளிய போகலாம்"னு சொன்னேன் "டேய் ராகுல் ஏன்டா லூசு மாதிரி பேசுற இந்த நேரத்துல எங்க போவ நாளை காலையில போகலாம்"னு நிலைமை தெரியாம உலருனாங்க... "டேய் வாங்கடா பொய் ரெண்டு cool drinks குடிச்சிட்டு வரும்வோம்"னா "டேய் போ டா cool drinks காக அவ்வளோ தூரம் போகணும்மா" திருப்பி ஆப்பு அடுசிட்டானுங்க, மறுபடியும் தண்ணிய தான் குடிச்சேன் .
ஆனாலும் நிகமாந்த் வீட்டுக்கு போகும் போது நிகமாந்த் அம்மா “என்ன நிகமாந்த், ராகுல் ரெண்டு போதும்கிரான், என்ன பா hostel தோச தான் சாப்பிடுவீங்களா!” அப்படின்னு என்ன வேற பார்த்திக்கிட்டு கேட்டாங்க.. அடுத்த தோச போட்டு எடுத்துக்கிட்டு வந்தாங்க கைய்ய வச்சு மறைச்சேன் “RAGHUL! MOVE YOUR HAND OUT” அப்படின்னு ஒரு sound விட்டாங்க பயத்துல்லையே கைய்ய எடுத்திட்டேன், அப்புறம் அடுத்த தோச திருப்பியும் கைய்ய வச்சு மறைச்சேன் கையிலே போட்டிட்டு போய்டாங்க “அப்பா ரெண்டு தோச extra’"னு சந்தோஷமா சாப்டேன். மதியம் வந்தது எல்லாரும் சாப்பிட உட்கார்ந்தோம் தட்டே ரொம்ப பெருசா இருந்தது ரெண்டு piece கிழங்கு வறுவல் வச்சாங்க இது என்னது அப்படினுனே ரெண்டையும் சாப்டேன் எல்லாத்துக்கும் அந்த கிழங்க போட்டிட்டு திரும்பி என் தட்டுல கிழங்கு இல்லைங்கிறத பார்த்து திரும்பி வந்து நாலு துண்டு வச்சாங்க அவ்வளோ தான் எல்லாத்தையும் சாப்பிட்டு முடுச்ச பிறகு தான் அத சாப்டேன்.
ரஞ்சித் வீட்டு பிரியாணி, நாராயண் வீட்டு வடை இந்த மாதிரி பல miss ஆச்சு, அட நாசம்மா போரவீன்களா நான் தான் திருப்பி திருப்பி சொன்னேனே கடைசி நாளு கடலூர்ல "டேய் வெளிய போகலாம்"னு திருப்பியும் என்ன உள்ள சாப்பிட வச்சு பசியோட கைய்ய கழுவ வச்சிடீங்க...டேய் ஒழுங்கா அடுத்த வாட்டி வீட்டுக்கு வந்தா 'கேட்டு வாங்கி சாப்பிடு 'னு சொல்லாதீங்க

ஒழுங்கா உங்க அம்மாவ உள்ள அனுப்புங்க நாமளே போட்டு சாப்பிடலாம் …ஆனா ஒண்ணு டா எல்லாரு வீட்டு சாப்பாடும் சூப்பர்.
Boss super super... Arummaiyaaga irundhadhu... Padikkum boedhu unga peelings'a apdiyae karachi kudichaa maadri oru feel... Semma... Unga permission oda indha blog'a copy panni appa amma ku anuppa poren...
ReplyDeleteKeep writing... :D
Hee.. Hee.. Hee.. Cant control my laughter..
ReplyDelete@ All : Now read the title once again..!
:D