Skip to main content

நானும், என் அண்ணனும்

நான் ரொம்ப நல்ல படிப்பேன், அண்ணன் அவ்வளவா படிக்க மாட்டான் அப்படிங்கிறது ஊர் அறிஞ்ச விஷயம்...
அட!! நீங்க வேற நான் பள்ளிக்கூடத்துல படிக்கும் பொது நான் சுமார் எழுபது சதவீதம் எல்லாம் பாடங்களுளையும் வாங்குவேன்..அது என்னமோ ரொம்ப கம்மி மாதிரி நேர எங்க அண்ணன்ட போட்டு கொடுத்திருவானுங்க "என்ன ராஜீவ் உன் தம்பி சரியாவே மார்க் எடுக்க மாடீங்கறான்" அட-நாய்களா வகுப்புல என்னைவிட கம்மியா மதிப்பேன் எடுத்தவன் எத்தனையோ பேறு இருக்கான் அவீங்களை எல்லாம விட்டுட்டு என்னையவே நோண்டு வானுங்க...வீட்ல பார்தீங்கனாலும் அதே நிலைமை தான் எங்க அப்பா ஒரு அஞ்சாயிரம் செலவு பண்ணி ஒரு showcase வாங்கினாரு அதுல எங்க அண்ணன் சின்ன வயசுல இருந்து வாங்கின "மெடல்" அப்புறம் "ஷீல்ட்" ஒண்ணு விடாம நிறப்பிட்டாறு... அப்புறம் என்ன பார்த்து "ராகுல் எப்போ நீ இந்த மாதிரி வாங்க போற, நான் ஒண்ணும் ராஜீவ்வுக்காக இத வாங்கலப்பா உனக்கு இத பார்க்கும் போதெல்லாம் வெறி வரணும் அதுக்காகத்தான் வாங்கினேன்".. ஆமாம்மா ரொம்ப வெறி வந்தது ஆனா படிப்பு மேல இல்ல, அண்ணன் மேல தான் வந்தது " அட நாசமா போறவனே ஒரு வாட்டியாவுது கொஞ்சும் கம்மியா மதிப்பேன் எடுக்க மாட்டியா எப்ப பார்த்தாலும், "அப்பா நான் இந்த தடவ கணிதத்துல நூறு" இப்படி சொல்லிச் சொல்லியே என்ன சாவடிச்சிட்டான்...இதுல என்ன ஒரு சுவாரசியும்னா நான் தான் ரொம்ப நேரம் புத்தகமும் கையும்மா இருப்பேன், எங்க அண்ணன் என்னடானா எப்ப பார்த்தாலும் தூங்கிகிட்டே இருப்பான்...தினமும் தூங்குவான், பரிச்ச நேரத்துலையும் தூங்குவான் ஆனா மதிப்பேன் மட்டும் என்ன விட ரொம்ப ஜாஸ்தியா வாங்குவான்..எங்க அப்பா ராத்திரி நான் தூங்க போகும் போது சொல்லுவாரு "டேய் ராகுல் காலையில வெள்ளனா நாழு மணிக்கெல்லாம் எழுப்பி விட்ருவேன்"...அப்படியே மெல்ல எங்க அண்ணன்ட " காலையில எத்தன மணிக்கு பா உன்ன எழுப்பி விடட்டும்"... இது கூட பரவாயில்லைங்க எங்க அண்ணன் பத்தாம் வகுப்பு படிக்கும் போது...சரி அவன காலையில சீக்கரம் எழுப்பிரதுல ஒரு அர்த்தம் இருக்கு அவனுக்கு கம்பெனி கொடுக்கனும்மா அதுக்காக என்னையும் எழுப்பி விட்டிடுவாறு..."நீ தூங்கிறத பார்த்தா அவனுக்கும் தூக்கம் வரும், எழுந்திரிப்பா" இது நீதியா. அதே கதிதான் அவனுக்கும் நடந்தது இருந்தாலும்...

நானும், அண்ணனும் அடி வாங்கிற அழகே தனி தான் போங்க...நான் ரஜினி மாதிரி அடி வாங்குவேன், எங்க அண்ணன் கமல் மாதிரி அடி வாங்குவான்...என்ன அடிக்கும் போது மட்ட அளவுகோல் என் மேனியில பட்டு துண்டு துண்டா பறக்கும், அடி வாங்கிற சத்தம் சும்மா எட்டுத்திக்கும் முழங்கும்...அட உண்மையிலே தாங்க...அடுத்த நாளு பக்கத்துக்கு வீட்டுக்காரரு கேட்பாரு "என்ன ராகுல் நேத்து சம..ஹ்ம்ம்"...என்னமோ அவன் பிள்ளை மாநிலத்திலையே முதல் மாணவன் மாதிரி, அவன் பிள்ளை ஏழு பேறு படிக்கிற வகுப்புல ஐந்தாவுதா வந்திருக்கான், அவரு என்னை பார்த்து கேட்கிறாரு...ரெண்டு வீடு தாண்டிலாம் நான் அடி வாங்கினதலாம் கேட்டிருக்குன்னா பாருங்க, ரெண்டு வீடு தாண்டி என்னோட வகுப்புல படிக்கிற ஒரு மாணவனோட வீடு, அவன் அடுத்த நாளு வகுப்புல கேட்டான் "டேய் ராகுல், அடி வாங்கும் போது ஏன்டா ஒரே இடத்துல நிக்கிற?". " பின்ன என்னடா பண்ண சொல்லுற?". "டேய், நான்லாம் அடி வாங்கும் போது சும்மா அங்கையும், இங்கயுமா ஓடுவேன் எங்க அப்பா என்னை துரத்தியே ஒஞ்சி போயிடுவாரு"..ஹ்ம்ம் இது நல்லா இருக்கே, இன்னைக்கு மதிப்பெண் சொல்லும் போது இந்த வித்தைய பயன் படுத்தலாம்னு நினைச்சேன். அதே மாதிரி அப்பாவும் அடிக்க வந்தாரு.. லேசா விலகினேன், அப்பா உடனே ஜாக்கிச்சான் மாதிரி விலகின தலைய புடுச்சி சும்மா முதுகுலா நங் நங்குன்னு நாழு வச்சாரு..முதுகு மேல இடி இடிச்கிட்டு இருந்தப்போ மனசுக்குல அந்த நாயே நல்லா திட்டினேன் "அட நாசமா போறவனே, விலகாம இருந்திருந்தா...அப்பா! ..ஒரு அடி..அப்பா!..யோட தப்பியிருப்பேன், உன்னால பாருடா..அப்பா!..அப்பா!".. ஒவ்வரு வட்டம் நான அப்பானு சொல்லும் போதும் முதுகில ஒரு அடி விழுந்திருக்கு..

எல்லா வீட்லையும் அடிப்பாங்க, ஆனா எங்க வீட்லையும் மத்தவுங்க வீட்லையும் நடக்குற இந்த நிகழ்ச்சியில்ல ஒரு வித்தாயசம் இருக்கு, மத்தவுங்க வீட்ல அடி விழுகும் போது, வீட்ல இருக்கிறவுங்க எல்லாம் ஓடி வந்து காப்பதுவாங்க, ஆனா எங்க வீட்ல அது எல்லாம் நடக்கவே நடக்காது..நான் அடி வாங்கும் போது, அண்ணன் காரச்சேவு சாப்பிட்டுகிட்டே படிச்சுக்கிட்டு இருப்பான், சமையல் அறையில ஏதவாது வெந்துக்கிட்டு இருக்கும், அப்பா இங்க என்ன தாளிச்சிக்கிட்டு இருப்பாரு, எல்லாம் முடிஞ்ச பிறகு அண்ணன் அப்பயும் அவன் வேலைய பார்த்துக்கிட்டு இருப்பான், அடிச்சு முடிகிரப்போ மணி எட்டு ஆயிரும், வீட்ல ஒன்னுமே நடக்காத மாதிரி வழக்கம் போல "தோச போட்டாச்சு சாப்பிட வா"...என்ன கொடுமை சரவண்ணன் இது!!...அதே மாதிரி தான் அண்ணனுக்கும்.. அவன் கதை என்னோடதவிட விட ரொம்ப நல்லா இருக்கும், அண்ணன சாப்பிட வைக்க எவ்வளோவோ அப்பா முயற்சி பண்ணிப்பார்தாறு ஹம்ம்ம் ஒரு பருப்பும் வெந்தப்பாடு இல்ல, எத சாப்பிட்டாலும் super'a half boil போடுவான்...தினமும் காலையில half boil, தவறாம போடுவான், பேருச்சம் பழம் வாங்கி கொடுத்தாரு ஹ்ம்ம், மீன் மாத்திர, "அட நாயே உனக்கு என்னதாண்ட பிடிக்கும் சொல்லித்தொலை டா" அப்படின்னு ஒரு வட்டம் tension ஆகி கத்திட்டாறு. ஏதோ beans powder அதக்கூட வாங்கி கொடுத்தாரு, அண்ணன் எல்லாத்தையும் சாப்பிட்டு super'a half boil போடுவான்...சரி சாப்பிடாதன வாந்தி வருதுன்னு சாபிடாமா கொஞ்சத்த தூக்கி மாடில போட்டான், பாவும் ஒரு காக்க அத தூக்கிட்டு வந்து திருப்பி வீடுக்குளையே பொற்றுச்சு, சரி மாடில போட்ட காக்கா சதி பண்ணிடுதூ, வீட்டுக்குள்ள இருக்கிற மூல முடுக்க தேடி அதுல போட்டான், மறுபடியும் எலியும் கரப்பான்-பூச்சியும் தூக்கி நடுவுல பொற்றுச்சு, அட கடவுள ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி போட்டாலும் நமக்கு கண்டம்னு புரிஞ்சி, கடைசியில "டேய், ராகுல் தயவு செய்து இந்த இட்லிய எடுத்துக்கோடா நான் தொடக்கூடயில்ல, டேய் please இந்த வடைய சாப்பிட்டிடுடா" அப்படின்னு கேட்ப்பான், முடிஞ்சா செய்வேன் இல்லன என்ன பண்றது, hero villana மார்க்கெட்'la போட்டு அடிக்கும் போது எப்படி junior artistlaam பக்கத்துல நிண்ணு வேடிக்க பார்பான்களோ அந்த மாதிரி வேடிக்க பார்க்க வேண்டியது தான், ஆனா ஒரு விஷயம் எவ்வளோ அடிச்சாலும் அந்த நாளு இல்ல அடுத்த நாள் ஒரு consolation prize'ah எனக்கும், அண்ணாக்கும் ஒரு Five star அப்புறம் Torino கண்டிப்பா கிடைக்கும்...
இங்க தான் நீங்க கமல்ல கவனிக்கணும், சில நேரத்துல பாவும் பச்சை உடம்பு அடி தாங்க முடியாது, அதுனால என்ன பண்ணுவான், ஒரு இட்லிய அப்படியே வாயில மென்னு, வாய்க்கொப்பளிகும் போது அப்படியே அதையும் சேர்த்து துப்பிருவான், சில நேரத்துல இட்லிய அப்படியே compress பண்ணி தட்டுக்கடியில்ல வச்சு, சாப்பிட்டு முடுச்சு தட்டத்தூக்கும் போது அதையும் தூக்கி அப்படியே wash basin'la போட்டு கைய நல்லா கழுவி விடுற மாதிரி நடிச்சு அப்படியே இட்லிய கரச்சி விட்ருவான். அடி வாங்கும் போதும், super'a நடிப்பான், முதல் அடி விளந்தவுடனே "அப்பா!! மூச்சு விட முடியலப்பா!", அப்படியே உண்மையிலே மூச்சு வாங்குவான், சில நேரத்துல உண்மையுனு நம்பி, அப்பா அடிகிறத நிறுத்திறுவாறு .
இந்த மாதிரி பல விஷயங்கள் நடந்திருக்கு...ஆனாலும் சில நேரம் அவன் தம்பிகிறத பெருமையா சொல்லிக்கலாம்...அப்போ எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப சின்ன வயசு, நானும் எங்க அண்ணனும் தனியா சாப்பிட போன்னோம், கடையில ஒருத்தன் எங்கள வம்புளுத்தான் "தம்பி மோருக்கும், தயிருக்கும் என்னப்பா வித்யாசம்" அப்படின்னு...அண்ணன் ஒரு மொற மொரச்சிட்டு "தயிருள தண்ணிய ஊத்தினா மோரு, இது தெரியாத" அப்படின்னு ஒரு நக்கல் திருப்பி உட்டான். இது பெரிய விஷயமா, அப்படின்னு உங்களுக்கு தோணலாம் அப்போ எங்களுக்கு ரொம்ப சின்ன வயசு அதாவுது "சின்ன முள்ளு நாளுல இருக்கு பெரிய முள்ளு அஞ்சுல இருக்கு" அப்படின்னு சொல்லுற வயசு. இந்த கேள்விய அவன் எங்ககிட்ட கேட்டிருக்கான அதுலையே தெரிய வேணாம் எங்களுக்கு அப்போ என்ன வயசு இருக்கணும்னு. இன்னொருதடவ எங்க அப்பா "டேய், புத்தகத்த ஒழுங்கா அடுக்கி வைகங்கடானு" கோவ்வம்மா சொன்னாரு, உடனே அண்ணன் "இது என்ன museum'a எல்லாம் அழகா அடுக்கி வக்கிரத்துக்கு, தினமும் maths book தேவைப்படும் அத மேல வச்சிருக்கேன், இத தூக்கி கீழ வச்சா தினமும் குனுஞ்சுக் குனுஞ்சு எடுக்கணும்" அப்படின்னு திருப்பி ஒரு sound விட்டான். அப்பாவால ஒண்ணும் சொல்ல முடியல!!... வேற என்னப்பா சொல்ல school first notes என்கிட்டே எப்பவும் reference'a இருக்கும்..

இருபத்து மூணு வருஷம் அவனோட இருந்ததுல ஒரு விஷயங்கள தான் உங்களோட நான் இப்போ share பண்ணி இருக்கேன்...அதுல நிறையா miss கண்டிப்பா பண்ணி இருப்பேன்..மீண்டும் எப்போவாது அத பார்துக்கிலாம்...

Comments

  1. thanks a lot.I enjoyed your posting. :). how you could remember so many things precisely and the coherent way of presentation is amazing.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இரண்டு சிப்பாய்கள்

ஜெய விஜயீபவ!!..என்ற கோஷங்கள், சுற்றும் முற்றும் ஒலித்தது.. ரோஜா பூக்கள் பாதைகள் எங்கும் தூவி விடப் பட்டன..... எல்லா காலங்களிலும், பயந்தான்கொளிகள், கொடுத்த வேலையை செய்யப் பிடிக்காதவர்கள், எப்பொழுதும் குற்றம் கூறுபவர்கள், நக்கல் அடிப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள், அவர்களை ஏனோ இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், ஒளவையார்,கண்டறிந்து, கூற மறந்தார்களோ தெரியவில்லை. நான் இன்று எடுத்திக்கொண்டது அம் மாதரியான ஆட்களைத்தான்... :அடி ஏய், வெளியே வந்து எனக்கு வீரத் திலகம், இடப் போகிறாயா இல்லையா? உள்ளே இருந்து, ஒரு பெண்மணி வாயை அரைத்துக்கொண்டே வெளியே வந்தால் :உமக்கு எதுக்கு வீரத் திலகம், வெட்டியாக கூட்டத்தோடு கூட்டம்மாக போகிறவன் தானே நீ. :ஏன் கூற மாட்டாய், உன் அப்பனிடம் என் வீரத்தை பற்றி கேளும், சும்மா ஒன்றும் இல்லை, இரண்டு மாட்டை அடக்கி தான் உன்னை திருமணம் செய்தேன். :ரொம்ப ஒன்றும் கர்ஜிக்க வேண்டாம், நீங்கள் வருவீர்கள் என்று தெரிந்து நான் அந்த மாட்டிருக்கு இரண்டு நாள் உணவு வைக்கவில்லை. :ஏன் செல்லமே, என் மீது காதலா? :காதல் ஒன்றும் இல்லை தலைவனே, வீணாக என் வீட்டு காளைக்கு இறையாக வேண்டாம் என்று தான் விட்...

கொடுமை!

"உங்க ஊரு சாப்புடுல மட்டும் அப்படி என்ன ராகுல் இருக்கு , எல்லாத்திலையும் அரிசிய போடறீங்க, காலையில இட்லி சாம்பார், மதியம் சோறும் சாம்பார், திருப்பி சோறும் ரசம், திருப்பி சோறும் தயிரும், உங்களுது என்னமோ ரொம்ப நல்லா இருக்கிற மாதிரி, அதுக்கு ரொட்டி எவ்வளவோ தேவலாம்.." (மனசில் ஒரு குரல்) ராகுல்! பொறுத்தது போதும் பொங்கி ஏழு! டேய் ! நாதாரிகளா நானும் ஏதோ corporate உலகம் எதுக்கு சண்ட போடணும் சிரிச்சி!, சிரிச்சி!, சமாளிக்கலாம் அப்படின்னு பார்த்தா கடைசியில எங்க சாப்பாட்ட பத்தி கேவலமா பேசி எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிடீங்க. "என்னது எங்க சாப்பாடு கேவலம்மா இருக்கா! அடப் பாவிகளா! டேய் உங்க சாப்பாடு நல்லா இருக்குனு சொல்லி இருந்தா போனா போகுதுன்னு விட்ருப்பேன், எங்க சாபாடைய்யா குறை சொல்லுற, நீங்க வக்கிர இந்த ரொட்டி, பருப்பு, பச்ச அரிசி இத விட, டேய் நல்லா கேட்டுக்கோ இத விட எங்க வாழை இலையில அவியல், பொரியல், வறுவல், ஊருக்காய், சாப்பாடு, சாம்பார், ரசம், தயிர், பாயாசம், இதெல்லாம் எவ்வளோ மேல் டா!, எங்க சாப்பாடு கேவலம்மா இருக்கா, மனசாட்சின்னு ஒண்ணு உங்களுக்கு இருக்கா, மத...

என்னைத்தாவுது போட்டு ஆட்டுங்க !!

எங்க கல்லூரியில ஒரு விழா, அதுல நாடகம், நடனம் கம்மியாவும் மொக்க ஜாஸ்தியாவும் எப்போவும்மே இருக்கும். நாடகத்துக்கு இடையில மேடையில வந்து சில பேறு குரல் மாத்தி பேசுறதும், சில பல ஒலியுடன் கூடிய ஒளிக் காட்சிகளையும் காட்டுறது வழக்கம். நானும் என் நண்பன் நிகமாந்துக்கும் எப்பொழுதும் இதான் வேலை, நாங்க சொல்லுறத கண்டிப்பா சேத்துக்க மாட்டானுங்கனு தெள்ளத் தெளிவா தெரிஞ்சிருந்தும், சும்மா எங்களுக்குள்ளையே பேசிப்போம் இப்படி இருந்தா எப்படி இருக்கும்னு. அந்த வகையா வந்த சில பல கற்பனைகளை, இங்க தூவி விட்டிருக்கேன். : ஏன் நிகமாந்த அந்த பெயர்க் காட்சிய இப்படி பண்ண என்ன? : எப்படி? : சொல்லுறேன் கேளுங்க, மேகதுக்குள்ள ஆண் கடவுள்ளும் பெண் கடவுள்ளும் பேசிக்கிறாங்க. : யோவ்! பெண் கடவுள் குரலுக்கு எங்க போவீங்க. : நிகமாந்த இதலாம் ஒரு பிரச்சனையா, ஏதாவுது EEE, Prod'ல இருந்து பிடிச்சிக்கிடலாம். : சரி, மேகத்தையும், கடவுளையும் எப்படி காட்டுவீங்க? : நிகமாந்த், கிராபிக்ஸ்’ல காட்றோம். : ராகுல்!, நாம போடப் போறது கே.ஸ்.ரவிக்குமார் படம் மாதிரி ஒரு மசாலா, நீங்க ஷங்கர் மாதிரி யோசிக்கிறீங்க, காசு இல்ல பாஸ். :இதான்யா,...